பரபரப்பாகும் கொல்கத்தா பலாத்கார வழக்கு.. மருத்துவமனை முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் அதிரடி கைது
கொல்கத்தா: கொல்கத்தா பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக நாளுக்கு நாள் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
மேற்குவங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் இரண்டாமாண்டு முதுநிலை மருத்துவம் பயின்று வந்த பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது. மருத்துவரைப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாகக் கூறப்படும் சஞ்சய் ராய் விட்டுச் சென்ற புளூடூத் மூலம் அடையாளம் காணப்பட்டு, போலீஸார் அவரை கைது செய்துள்ளனர்.

கொலை சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து நாட்டின் பல பகுதிகளிலும் மருத்துவர்கள் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. உயிரிழந்த பெண் மருத்துவரின் தலை, முகம், கழுத்து, கைகள், பெண்ணுறுப்பு என 14 இடங்களில் கொடூர காயங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், அதிபயங்கர தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், கழுத்து நெரிக்கப்பட்டதில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு பெண் உயிரிழந்துள்ளார்.
இந்த வழக்கை சிபிஐ தொடர்ந்து விசராணை செய்து வருகிறது. மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷிடம் சிபிஐ அதிகாரிகள் 18 நாள்கள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின்போது இரண்டு முறை உண்மை கண்டறியும் சோதனையும் நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், மருத்துவமனைக்கு சம்பந்தமே இல்லாத ஆட்கள் நிறைய பேர் மருத்துவமனையில் இருந்தது அதிகாரிகளுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், பெண்ணின் பெற்றோருக்கும் தாமதமாகவே தகவல் தெரிவித்துள்ளனர். தற்கொலை என்றும் கூறியுள்ளனர். தற்கொலை என்று சொல்ல அவர்களை அறிவுறுத்தியது யார் என பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. அதேசமயம், போலீஸார் மருத்துவமனைக்குள் வந்தபோது மருத்துவமனை முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் ஏன் அங்கு இல்லை.
மருத்துவமனை நிர்வாகத்துடன் போலீஸார் பேசியது ஏன் என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, சந்தீப் கோஷுக்கு மேலும் சில உண்மை கண்டறியும் சோதனை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டிருந்தனர். அதேபோல, சஞ்சய் ராயும் இதுவரை மருத்துவமனைக்கு நிர்வாகத்துக்கு எதிராக எதுவும் பேசவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும், குற்றம்சாட்டப்பட்ட சஞ்சய் ராய் தான் நிரபராதி என்று வாக்குமூலம் அளித்துள்ளார். சிலரால் திட்டமிட்டபடி சட்டத்தில் சிக்கவைக்கப்படுவதாக வழக்கறிஞர் கவிதா சர்க்கார் தெரிவித்துள்ளார். தான் கொலை செய்யவில்லை என்றுதான் பல இடங்களில் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். ஆனால், குற்றவாளி சஞ்சய் ராய்க்கு தொடர்பு இருப்பதாக டிஎன்ஏ மற்றும் தடயவியல் அறிக்கைகள் உறுதி செய்துள்ளன.
இந்த ஆய்வின் முடிவில் வேறு யாருக்கம் இதில் தொடர்பு இருக்க வாய்ப்பில்லை என்பதால் டிஎன்ஏ மற்றும் தடயவியல் அறக்கைகள் உறுதி செய்துள்ளன. நிபுணர்களின் இறுதிக் கருத்து்கு இந்த ஆய்வறிக்கை அளிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. மேலும், இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் வேறு எந்த நபருக்கும் தொடர்பு இருப்பதாக எந்த ஆதராமும் கிடைக்கவில்லை என்று கூறப்பட்டு வந்தது.
இந்நிலையில், ஆர்.ஜி. கர் மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கடந்த வாரத்தில் அவருக்குச் சொந்தமான வீடு உள்ளிட்ட 14 இடங்களில் ஆய்வு செய்யப்பட்டது. இந்நிலையில், 2 வாரகால விசாரணைக்குப் பிறகு நிதி முறைகேடு விவகாரத்தில் சந்தீப் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக, இந்திய மருத்துவச் சங்கத்தால் இவரை இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications