அமலாக்கத்துறைக்கு ‘இடி’.. நளினி சிதம்பரத்துக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது சிறப்பு கோர்ட்!
கொல்கத்தா: சாரதா சிட் பண்ட் மோசடி தொடர்பான வழக்கில் மூத்த வழக்கறிஞரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவியுமான நளினி சிதம்பரத்துக்கு எதிரான மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. நளினி சிதம்பரத்துக்கு எதிரான அமலாக்கத்துறை மனுவை தள்ளுபடி செய்துள்ளது கொல்கத்தா சிறப்பு நீதிமன்றம்.
மேற்கு வங்கத்தில் சாரதா நிதி நிறுவனத்தை சுதீப்தா சென் கடந்த 2006-ல் தொடங்கினார். முதலீடுகளுக்கு நல்ல வட்டி கிடைக்கும் என்று மக்களிடம் கூறி, ரூ. 6,000 கோடியைத் திரட்டியது அந்த நிறுவனம். ஆனால் சொன்னபடி முதலீட்டாளர்களுக்கு வட்டியும் அசலும் தரப்படவில்லை. இதனால் பொதுமக்கள் கொந்தளித்தனர். சாரதா சிட் பண்ட் முறைகேடு 2013ல் அம்பலமாகி அந்த நிறுவனமே மூடப்பட்டது.

சாரதா நிதி நிறுவன நிறுவன தலைவர் சுதிப்தா சென் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் முக்கிய புள்ளிகள் பலரும் சிக்கினர். இந்த வழக்கில் தொடர்புடைய காங்கிரஸ் மூத்த தலைவரான மனோரஞ்சனா சிங் சார்பில் சாரதா சிட் பண்ட் நிறுவனர் சுதீப்தா சென்னுடன் பேச்சுவார்த்தை நடத்தியவர் நளினி சிதம்பரம். கட்டணமாக அவர் ரூ. 1 கோடி பெற்றதாகவும் புகார் எழுந்தது.
சாரதா நிதி நிறுவன மோசடியில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவியும் மூத்த வழக்கறிஞருமான நளினி சிதம்பரம், கட்டணமாக ரூபாய் ஒரு கோடி பெற்றது தொடர்பாக அமலாக்கத்துறையினர் விசாரணை செய்ய முடிவு செய்தனர்.
மேலும், இதுதொடர்பாக விசாரணை நடத்துவதற்காக நேரில் ஆஜராகும்படி நளினி சிதம்பரத்துக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சம்மன் அனுப்பப்பட்டது. இந்த சம்மனை ரத்து செய்யக்கோரி நளினி சிதம்பரம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கு தடை விதித்தார். இந்த தடையை நீக்கக்கோரி அமலாக்கத்துறை சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டை விசாரித்த உயர் நீதிமன்றம் தடையை ரத்து செய்தது.
நளினி சிதம்பரம் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. கொல்கத்தாவில் உள்ள PMLA நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக 1000 பக்க ஆதாரங்களுடன் 65 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை சமர்ப்பித்தது. அதில், 1 கோடியே 48 லட்சம் ரூபாயை சாரதா குழும, நளினி சிதம்பரத்துக்கு செலுத்தியுள்ளது எனக் குற்றம்சாட்டப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை கொல்கத்தா சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. சாரதா சிட் ஃபண்ட் ஊழல் தொடர்பாக மூத்த வழக்கறிஞர் நளினி சிதம்பரத்திற்கு எதிரான அமலாக்கத்துறையின் மனுவை கொல்கத்தாவில் உள்ள பணமோசடி தடுப்புச் சட்டம் (PMLA) நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக நளினி சிதம்பரம் மீதான குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரமும் இல்லை. வழக்கறிஞர்களின் கட்டணம் மற்றும் செலவுகளை குற்றத்தின் வருமானம் என்று கூற முடியாது எனத் தெரிவித்து, நளினி சிதம்பரத்துக்கு எதிரான அமலாக்கத்துறை மனுவை தள்ளுபடி செய்தது கொல்கத்தா சிறப்பு நீதிமன்றம்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications