பலாத்காரத்திலிருந்து தப்பிக்க 2வது மாடியிலிருந்து குதித்த பெண்... அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்!
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பலாத்காரத்திலிருந்து தப்பிப்பதற்காக இரண்டாவது மாடியிலிருந்து குதித்த பெண், அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட 20 வயது இளம்பெண், நேற்று தன் ஆண் நண்பரைச் சந்திப்பதற்காக அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்.
அப்போது அங்கேயிருந்த ஆண் நண்பரும் அவரது நண்பர்கள் இருவரும் சேர்ந்து, அப்பெண்ணிற்கு மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தைக் குடிக்கக் கொடுத்துள்ளனர். இதனால் சிறிது நேரத்திலேயே தூக்கக் கலக்கத்திற்கு ஆளானார் அப்பெண்.
உடனடியாக அப்பெண்ணை பலாத்காரம் செய்ய அவர்கள் முயன்றுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண், அருகில் இருந்த பால்கனி வழியாக இரண்டாம் மாடியில் இருந்து கீழே குதித்தார்.
அவர் குதித்த இடத்தில் மணல் கொட்டிக் கிடந்ததால், அதிர்ஷ்டவசமாக அப்பெண் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். அப்பெண்ணின் அலறல் சத்தத்தைக் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தார், உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
பின்னர் மாடியில் இருந்த 3 ஆண்களும் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
"நாளை மத்திய அரசு இருக்காது.. அப்போ உங்களை பார்த்துக்கறோம்.." போன் போட்டு மிரட்டிய மம்தா? பரபரப்பு -
மூத்த திரிணாமுல் தலைவர் மண்டை உடைப்பு.. ரத்தம் கொட்ட கொட்ட பானர்ஜி செய்த சம்பவம்! பரபரப்பு -
மகளிர் நிதி உதவித் திட்டம்.. 30 லட்சம் போலி பயனாளிகள்? மேற்கு வங்க சுவேந்து அதிகாரி உடனடி ஆக்ஷன் -
6வது இடத்துக்கு தள்ளப்பட்ட சென்னை விமான நிலையம்.. முந்திய பெங்களூர்! பிசியான ஏர்போர்ட் லிஸ்ட் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications