முதியவர் உதவிகேட்க கூப்பிடுறார்னு நெனச்சோம்.. ஆனா அவர் செய்த காரியம் இருக்கே.. காவலர்கள் நெகிழ்ச்சி
கொல்கத்தா: கொல்கத்தாவை சேர்ந்த ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியர் கொரோனா நிதிக்காக 10 ஆயிரம் பணத்தை அளித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் ஆட்டிப் படைத்து வருகிறது. இந்த நிலையில் உலகில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 19 லட்சமாக உயர்ந்துள்ளது. அது போல் பலியானோரின் எண்ணிக்கை 3 லட்சமாக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில் பாதிப்பு அதிகம் இருப்பதால் மக்கள் நிதி அளிக்க வேண்டும் என மத்திய அரசும் அந்தந்த மாநில அரசுகளும் கேட்டுக் கொண்டுள்ளன.

லாக்டவுன்
கொல்கத்தாவை சேர்ந்த 82 வயதான சுபாஷ் சந்திர பானர்ஜி என்பவர் தனியார் கல்லூரியில் பேராசிரியாக இருந்து ஓய்வு பெற்றவர்.அவர் டம்டம் பகுதியில் சிறிய வீட்டில் தனியே வசித்து வருகிறார். அவர் வாங்கும் ஓய்வூதியத்தில் மருந்து மாத்திரைகள் வாங்குவார். இவர் தனது வீட்டுக்கு அருகே லாக்டவுன் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாரை அழைத்துள்ளார்.

முதியவர்
பார்ப்பதற்கு பலவீனமாக இருந்த நிலையில் அவர் ஏதோ உதவி கேட்கிறார் என போலீஸார் நினைத்தனர். உடனே அவர் வீட்டுக்கு சென்றனர். அவர்களிடம் ரூ 10 ஆயிரத்திற்கான காசோலையை நீட்டினார் அந்த முதியவர். பின்னர் இதை கொரோனா நல நிதிக்காக ஒப்படைத்துவிடுமாறு அந்த முதியவர் கேட்டுக் கொண்டார்.

பாராட்டு
எனக்கு ஆன்லைனில் பணம் செலுத்துவது எப்படி என தெரியாது. அதனால்தான் உங்களை அழைத்தேன். தயவு செய்து தவறாக எடுத்துக் கொள்ளாதீர். என்னை மன்னித்து விடுங்கள் என்றார். அவர் கொடுத்த 10 ஆயிரத்தை விட அவரிடம் இருந்த உதவும் குணம் எத்தனை கோடிக்கும் ஈடாகாது. இவரது புல்லரிக்கும் செயலால் போலீஸார் திகைத்ததோடு அவருக்கு பாராட்டுகளை தெரிவித்தனர்.

உதவும் எண்ணம்
இவரது நல்ல மனதை அங்கிருந்த காவலர்கள் பாராட்டினர். இந்த பெரியவரின் உதவும் எண்ணம் பேஸ்புக்கில் பதிவு போட்டதால் தற்போது நாடு முழுவதும் வைரலாகி வருகிறது. மற்றவர்களும் உதவும் எண்ணத்தை ஊக்குவிக்கும்படியாக உள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications