2 ரெட் லைட் ஏரியா.. போகிற வழியில் பெண்ணுக்கு சில்மிஷம்.. கொல்கத்தா கொலைகாரன்.. ஷாக் வாக்குமூலம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கொல்கத்தாவில் மருத்துவரை பலாத்காரம் செய்து கொலை செய்த சஞ்சய் ராய், அதே நாள் இரவில் வேறு ஒரு பெண்ணை பாலியல் ரீதியாக தாக்கியதாக புகார் வைக்கப்பட்டு உள்ளது. சிபிஐ விசாரணையில் இது தொடர்பாக அவர் வாக்குமூலம் கொடுத்துள்ளாராம். அதாவது மருத்துவரை பலாத்காரம் செய்யும் முன் அதே நாள் இரவு சஞ்சய் ராய் பெண் ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளார்.

விசாரணையின் போது, ​​சஞ்சய் ராய் குற்றம் நடந்த இரவில் தான் செய்ததை எல்லாம் விவரித்தார். நகரத்தில் இரண்டு சிவப்பு விளக்கு பகுதிகளுக்குச் சென்றதை ஒப்புக்கொண்டார், ஆனால் உடலுறவு கொள்ளவில்லை.

kolkata

அதேபோல் வருகிற வழியில் தெருவில் ஒரு பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதையும் செய்ததையும் அவர் ஒப்புக்கொண்டார்,. இது கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. கூடுதலாக, ராய் தனது காதலியுடன் வீடியோ கால் செய்ததாகவும், அவளிடம் நிர்வாண புகைப்படங்களைக் கேட்டதாகவும் தெரிவித்தார். அதற்கு அவர் புகைப்படங்களை அனுப்பியதாக கூறப்படுகிறது.

சஞ்சய் ராய் சிபிஐயிடம் விவரித்தபடி, கொலை நடந்த இரவில் நடந்த நிகழ்வுகளின் வரிசை பின்வருமாறு:

ஆகஸ்ட் 8: சஞ்சய் ராய் RG கர் மருத்துவமனைக்கு வந்தார். அங்கு அனுமதிக்கப்பட்டிருந்த நண்பரின் சகோதரனைப் பற்றி விசாரிக்க தனது நண்பருடன் அங்கே வந்துள்ளார்.

இரவு 11:15 மணிக்கு, ராயும் அவரது நண்பரும் மருத்துவமனையை விட்டு வெளியேறி மது அருந்த முடிவு செய்தனர். சாலையில் மது வாங்கி குடித்தனர்.

வடக்கு கொல்கத்தாவில் உள்ள சிவப்பு விளக்குப் பகுதியான சோனகாச்சியை பார்வையிட முடிவு செய்தனர். சோனகாச்சியில் பெண் எதுவும் கிடைக்கவில்லை. இதனால் தெற்கு கொல்கத்தாவில் உள்ள செட்லா என்ற சிவப்பு விளக்கு பகுதிக்கு செல்ல முடிவு செய்தனர்.

செட்லாவுக்குச் சென்று கொண்டிருந்தபோது, ​​சாலையில் ஒரு சிறுமியை அவர்கள் சில்மிஷம் செய்தனர்.

அதன்பின் செட்லாவில், சஞ்சய் ராய் சாலை ஓரத்தில் நின்று தனது காதலியுடன் வீடியோ கால் செய்துள்ளார். அவளின் நிர்வாண புகைப்படத்தையும் கேட்டுள்ளார். அதற்கு அவர் அனுப்பி உள்ளார்.

இன்னொரு பக்கம் அவரது நண்பர் செட்லாவில் உள்ள சிவப்பு விளக்கு பகுதியில் ஒரு பெண்ணுடன் உடலுறவு கொண்டார்.

இதையடுத்து சஞ்சய் ராயும் அவரது நண்பரும் மருத்துவமனைக்குத் திரும்பினர். சஞ்சய் ராய் நான்காவது மாடியில் உள்ள சோதனை மையத்திற்குச் சென்றார்.

அதிகாலை 4:03 மணியளவில், சஞ்சய் ராய் மூன்றாவது மாடியில் உள்ள செமினார் ஹாலுக்கு அருகிலுள்ள அறைகளுக்கு செல்வது சிசிடிவி காட்சிகளில் காணப்பட்டது.

பாதிக்கப்பட்ட அந்த பெண் தூங்கிக்கொண்டிருந்த செமினார் ஹாலுக்குநுழைந்த ராய், அவளை கழுத்தை நெரித்தார். அதன்பின் பெண்ணை சஞ்சய் ராய் பலாத்காரம் செய்துவிட்டு, அந்த இடத்தை விட்டு வெளியேறி, கொல்கத்தா காவல்துறை அதிகாரியான அனுபம் தத்தாவின் வீட்டிற்குச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

சிபிஐ விசாரணையில் குறிப்பிடப்பட்ட அனைத்து இடங்களிலும் ராய் மற்றும் அவரது நண்பர் இருந்தது, அவர்களின் போன் லொகேஷன் மூலம் உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதாவது ராய் இரவு முழுக்க சிவப்பு விளக்கு ஏரியாக்களுக்கு சென்றுவிட்டு பெண் கிடைக்காததால் மீண்டும் திரும்பி மருத்துவமனைக்கு வந்தது லொகேஷன் ஹிஸ்டரியில் பதிவாகி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+