உயிர் பிரியும் தருணம்.. வீடியோ காலில்.. அம்மாவுக்காக பாட்டு பாடிய மகன்.. உருக்கும் சம்பவம்..!
வீடியோ காலில் தாய்க்காக மகன் பாடிய பாட்டு வைரலாகி வருகிறது
கொல்கத்தா: கொரோனா பாதித்து, ஆஸ்பத்திரியில் உயிருக்கு போராடி கொண்டிருந்த தன்னுடைய அம்மாவுக்காக, பாட்டு பாடிஉள்ளார் மகன்.. இவர் பாட்டு பாடிய அடுத்த சில மணி நேரத்தில், அம்மாவின் உயிர் பரிதாபமாக பிரிந்துள்ளது..!
வடமாநிலங்களில் தொற்று அதிகமாக பரவி வருகிறது.. தினந்தோறும் மரண எண்ணிக்கையும் அதிகமாகி கொண்டே இருக்கிறது.. தொற்றினால் உறவுகளை இழந்து ஏராளமானோர் நிர்க்கதியாய் தவிக்கின்றனர்.
அந்தவகையில் இளைஞர் ஒருவரும் பெற்ற தாயை இழந்து கடுமையான மனஉளைச்சலுக்கு ஆளாகி உள்ளார்.. கொல்கத்தாவை சேர்ந்தவர் ஷோஹம் சட்டர்ஜி.. இவரது அம்மாவுக்கு தொற்று கடுமையாக பாதிப்பு ஏற்பட்டது.
தீவிரமான சிகிச்சை தந்தும், அவர் அம்மாவை காப்பாற்ற முடியவில்லை.

பாட்டு
அப்போது, மரணதறுவாயில் இருந்த தன்னுடைய அம்மாவுக்கு மகன் ஒரு பாட்டு பாடியிருந்தார்.. இந்த பாட்டை டாக்டர் தீப்ஷிகா கோஷ் என்பவர் அவரது ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்... இவர்தான் அந்த தாய்க்கு சிகிச்சை அளித்து வந்தவர்.. அந்த ட்விட்டரில் டாக்டர் உருக்கமாக அவர் பதிவிட்டிருந்தது இதுதான்:

உருக்கம்
"என்னுடைய ஷிப்ட் முடியும் நேரம் வந்தது.. அப்போது, அடுத்த சில நிமிடங்களில் இறக்க போகும் நோயாளியின் மகனுக்கு நான் வீடியோ கால் செய்தேன்... எங்கள் ஆஸ்பத்திரியில் நோயாளிகள் விருப்பத்தை நாங்கள் எப்போதுமே நிறைவேற்றுவது வழக்கம்.. அந்த வகையில், அந்த நோயாளியின் மகன் என்னிடம் சில நிமிடங்கள் வேண்டும் என்றும், உயிரிழக்க போகும் தன்னுடைய அம்மாவுக்கு ஒரு பாட்டு பாடுகிறேன் என்றும் சொன்னார்.

நர்ஸ்கள்
பிறகு 'தேரா முஜ்சே ஹை பெஹலா கா நாட்டா கோய்' என்ற பாட்டை பாடினார்.. நான் என் கையில் செல்போனை பிடித்தபடி, அவரை பார்த்து கொண்டிருந்தேன்.. அவரோ, தன்னுடைய அம்மாவை பார்த்து பாடிக்கொண்டிருந்தார்... பிறகு திடீரென அந்த ரூமுக்குள் நர்ஸ்கள் வந்தனர்.. அவர்களும், இதை பார்த்துவிட்டு, அங்கேயே ஒரு ஓரமாக அமைதியாக நின்று கொண்டார்கள்..

முழு பாட்டு
ஆனால், பாடிக் கொண்டே வந்த மகன், திடீரென குரல் கமறி பாட்டை பாதியிலேயே நிறுத்தபோனார்.. பிறகு ஒருவழியாக சமாளித்து முழுப்பாட்டையும் பாடி முடித்தார்.. பிறகு போனிலேயே "உடம்பு இப்போ எப்படி இருக்கும்மா" என்று விசாரித்துவிட்டு, எனக்கும் நன்றி சொல்லிவிட்டு, போனை கட் பண்ணிவிட்டார்.

வெண்டிலேட்டர்
நானும், நர்ஸ்களும் அப்படியே உறைந்து நின்றிருந்தோம்.. எங்கள் கண்களில் நீர் ததும்பி கொண்டிருந்தது.. ஒவ்வொரு நர்ஸ்ஸாக மெல்ல வெளியேறி மற்ற நோயாளிகளை கவனிக்கவும், வெண்டிலேட்டர், டயாலிஸிஸ் யூனிட்களில் இருந்து வந்த அலாரம் காரணமாகவும் அங்கிருந்து நகர்ந்தனர்.. ஆனால், இந்த பாட்டு எங்களை அடியோடு மாற்றிவிட்டது. அதிலும் என்னை முழுசாக மாற்றிவிட்டது. என்றென்றும் இது அவர்களுக்கான பாடல்தான்" என்று பதிவிட்டிருந்தார்.

உருக்கம்
இந்த பாட்டை மகன் பாடிய அடுத்த சில மணி நேரத்திலேயே அம்மாவின் உயிர் பிரிந்துள்ளது.. இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம், சோஹம் சட்டர்ஜி மறுபடியும் அம்மாவுக்காக இன்னொரு பாட்டை பாடியுள்ளார்.. "என் அம்மாவிடம் இருந்து எனக்கு பிடித்த ஒன்றுதான் இசை.. ஒருவருக்கொருவர் அன்பையும் மரியாதையையும் வெளிப்படுத்த இது மிகச்சிறந்த வழியாகும். இது எங்களுக்கான பாட்டு.. ஐ லவ் யூ மா.. நீ இல்லாம இருக்கிறது ரொம்ப கஷ்டமா இருக்கு..ம்மா" என்று உருக்கத்துடன் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications