Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்தியாவின் முதல் இலக்கிய நகரம் கோழிக்கோடு! அப்படி இந்த ஊரில் என்ன இருக்குப்பா?

Subscribe to Oneindia Tamil

கோழிக்கோடு: இந்தியாவின் முதல் இலக்கிய நகரமாக யுனெஸ்கோ அமைப்பால் கோழிக்கோடு நகரம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்த மகிழ்ச்சிகரமான செய்தியை மாநில உள்ளாட்சித் துறை அமைச்சர் ராஜேஷ், அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அந்தளவுக்கு இலக்கியத்தில் பெயர் போனதா இந்தக் கோழிக்கோடு? என்னென்ன சிறப்புகள் உள்ளன?

கடவுளின் தேசம் என்று சொல்வார்கள் கேரளாவை. அந்தளவுக்கு இயற்கை எழில் கொஞ்சும் இந்த மாநிலம், அதே அளவுக்கு இயற்கை பேரிடர்களுக்கும் பெயர் போனது. உலக அளவில் சுற்றுலாவாசிகளைக் கவர்ந்திழுத்து வரும் கேரளா, இலக்கிய உலகிலும் மிகப்பெரிய செல்வாக்கு பெற்ற மாநிலம். கூடவே தீவிரமான திரை ரசிகர்கள் பலரும் கேரளாவை உதாரணம் காட்டும் சூழலைக் காணலாம். இந்திய இலக்கியத்துறையில் மிகவும் அறியப்பட்ட பல எழுத்தாளர்கள் மலையாளத்தில் உண்டு.

Kozhikode Kerala UNESCO

வைக்கம் முகம்மது பஷீருக்கு உலகம் முழுவதும் வாசகர்கள் இருக்கிறார்கள். அப்படித்தான் கமலாதாஸ். இவருக்கு இந்தியாவைத் தாண்டி வாசகர்கள் உள்ளன. தகழி சிவசங்கரன் பிள்ளை தொடங்கி பாலச்சந்திரன் சுள்ளிக்காடு, பால் சக்காரியா வரை பல எழுத்தாளர்களால் மலையாள இலக்கியம் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வருகிறது.

அதேபோல, கேரளாவில் நூலகத்திற்குப் போய் புத்தகங்களைப் படிப்பவர்களின் எண்ணிக்கை அதிகம். பல ஊர்களில் தனியால் நூலகங்கள் கூட மிகச் சிறப்பாக இன்று இயங்கி வருகின்றன. கேரள மாநிலத்தில் ஒரு பகுதியாக உள்ள நகரம் கோழிக்கோடு. மனிதாபிமானம், மத நல்லிணக்கம், நீதி உணர்வு , கருத்துச் சுதந்திரம் போன்றவற்றால் வகைப்படுத்தப்படும் அழகிய ஆன்மாவைக் கொண்ட நகரம் கோழிக்கோடு என்று கேரள அமைச்சர் ராஜேஷ் பேசியுள்ளார். அவர், "இது ஒரு முக்கியமான மரியாதை கோழிக்கோட்டுக்குக் கிடைத்துள்ளது. துடிப்பான கலையைப் பெற்றுத் தந்துள்ளது" என்று அவர் கூறினார். அப்படி என்ன மரியாதை இந்தக் கோழிக்கோட்டிற்குக் கிடைத்துள்ளது? அமைச்சர் ஏன் இந்த ஊரை இப்படிப் பாராட்டி இருக்கிறார்?

உலக அளவில் மிகப்பெரிய சாதனையைச் செய்துள்ளது கோழிக்கோடு. இந்தியாவில் இலக்கியம் என்றால் உடனே நினைவுக்கு வரும் மாநிலம் கொல்கத்தா. அப்படி ஒரு வளமான கலாச்சார வரலாற்றைக் கொண்ட நகரத்தைத் தோற்கடித்து யுனெஸ்கோவின் விருதை வென்றுள்ளது கோழிக்கோடு.
இந்தியாவின் இலக்கிய நகரம் என்ற மிகப்பெரிய அடையாளத்தைப் பெற்றுள்ளது கோழிக்கோடு நகராட்சி. எஸ்.கே.பொட்டக்காடு, வைக்கம் முகம்மது பஷீர் போன்ற இலக்கிய ஜாம்பவான்களால் பெயர் பெற்ற கோழிக்கோடு நகர் இந்த விருது கடந்த 23 ஆம் தேதி பெற்றுள்ளது. ஆகவே, இதன் அடையாளமாக வரும் காலங்களில் ஜூன் 23ஆம் தேதியை கோழிக்கோடு இலக்கிய தினம் என இனிமேல் ஆண்டு தோறும் கொண்டாடுவோம் என்றும் கேரள அரசு அறிவித்துள்ளது. இந்த நாளில், ஆறு பிரிவுகளில் சிறப்பு விருதுகள் அறிவிக்கப்படும் என்று அரசுக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, யுனெஸ்கோவின் இலக்கிய நகரம்' என்ற லோகோவை சுற்றுலாத்துறை அமைச்சர் பி.ஏ.முகமது ரியாஸ் வெளியிட்டுள்ளார். பழம்பெரும் மலையாள எழுத்தாளரும் ஞானபீட விருது பெற்றவருமான எம்.டி.வாசுதேவன் நாயரின் வீட்டிற்குச் சென்ற ராஜேஷ், கோழிக்கோடு மாநகராட்சியால் நிறுவப்பட்ட வைர விழா விருதையும் வழங்கினார். ஒரு காலத்தில் ஜாமோரின் நகரம் என்று அறியப்பட்ட கோழிக்கோடு, ஆங்கிலேயர் ஆட்சியின் போது காலிகட் என்றும் அழைக்கப்பட்டது.

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு பெர்சியர்கள், அரேபியர்கள், சீனர்கள், இறுதியில் ஐரோப்பியர்கள் போன்ற பல வெளிநாட்டினருக்கு கோழிக்கோடு கடற்கரைதான் நுழைவாயிலாக இருந்தது. கேரளாவில் சுதந்திரப் போராட்டத்தின் தொட்டிலாக விளங்கும் இந்நகரம் பல தசாப்தங்களாக புத்தகத் திருவிழாக்களுக்கான முக்கிய களமாக இருந்து வருகிறது. இந்நகரில் 500க்கும் மேற்பட்ட நூலகங்கள் இயங்கி வருகின்றன என்றால் சும்மாவா? மேலும் பல தசாப்தங்களாக எம் டி வாசுதேவன் நாயரின் இலக்கியச் செயல்பாடுகளின் களமாக இருந்து வருகிறது இந்தக் கோழிக்கோடு.
யுசிசிஎன் - இல் இணைந்த 55 புதிய நகரங்களில் இந்தியாவிலிருந்து குவாலியர் மற்றும் கோழிக்கோடு ஆகியவை இடம்பெற்றுள்ளன. இந்தப் புதிய பட்டியல் அக்டோபர் 31 அன்று வரும் உலக நகரங்கள் தினத்தன்று அதன் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இந்த புதிய நகரங்கள் "அவர்களின் வளர்ச்சிக்கான ஒரு பகுதியாக உள்ள கலாச்சாரம், படைப்பாற்றலைப் பயன்படுத்தி வருவதற்கான வலுவான அர்ப்பணிப்பு, நகர்ப்புறத் திட்டமிடலில் புதுமையான நடைமுறைகளை உண்டாக்குதல்" ஆகியவற்றுக்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளன என்று யுஎன் தனது அறிக்கையில் கூறியுள்ளது.

மத்தியப் பிரதேசத்தில் உள்ள குவாலியர் நகரம் இசைப் பிரிவில் விரும்பத்தக்க நகரப்பட்டியலில் இடம்பிடித்துள்ளது. அதேபோல ​​கோழிக்கோடு இலக்கியப் பிரிவில் இடம் பிடித்துள்ளது. இதற்கான யுசிசிஎன் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் 350 நகரங்களைக் கணக்கில் எடுத்துக் கொண்டு அலசி ஆராய்ந்துள்ளது. இந்தப் போட்டியில் மொத்தம் ஏழு படைப்புத் துறைகள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. கைவினை மற்றும் நாட்டுப்புறக் கலை, வடிவமைப்பு, திரைப்படம், உணவு, இலக்கியம், ஊடகக் கலை, இசை ஆகியவை அதில் அடங்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+