கோழிக்கோடு.. 15 நாளில் பிரசவம்.. கணவன் இறந்தது கூட தெரியாது..துணைவிமானியின் மனைவிக்கு நேர்ந்த கொடுமை
கோழிக்கோடு: கோழிக்கோடு விமான விபத்தில் பலியான துணை விமானியின் மனைவிக்கு இன்னும் 15 நாட்களில் குழந்தை பிறக்க உள்ளது. அவருக்கு தனது கணவர் இறந்த செய்தி இன்னும் தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது.
Recommended Video
கோழிக்கோடு விமான விபத்தும், அது தொடர்பாக வெளியாகும் செய்திகளும் இதயத்தை உருக்கும் வகையில் உள்ளது. இந்த விபத்தில் இதுவரை 18 பேர் பலியாகி உள்ளனர்.நேற்று துபாயில் இருந்து வந்த விமானம் தரையிறங்கும் போது ஓடுபாதையில் வழுக்கி ஓடி , இரண்டாக பிளந்து விபத்திற்கு உள்ளாகி உள்ளது.
இந்த விமான விபத்தில் விமானத்தின் பைலட் தீபக் வசந்த் சாத்தே மரணம் அடைந்தார். அதேபோல் விமானத்தின் துணை விமானி அகிலேஷ் சர்மாவும் மரணம் அடைந்தார்.

யார் இவர்
இதில் அகிலேஷ் சர்மாவிற்கு 32 வயதுதான் ஆகிறது. இவர் உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர். இவரின் குடும்பத்திற்கு நேற்று இரவு இந்த விபத்து குறித்து தெரிவிக்கப்பட்டது. அதேபோல் அகிலேஷ் சர்மாவின் மரணம் குறித்து விமானத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குழந்தை
அகிலேஷ் சர்மாவின் மனைவி மேக்நாவிற்கு 29 வயதுதான் ஆகிறது. இவர் தற்போது கர்ப்பமாக இருக்கிறார். இன்னும் 15 நாட்களுக்குள் குழந்தை பிறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவரிடம் நேற்று விபத்து குறித்து தெரிவித்தலில் இருந்தே, இவர் பெரும் அதிர்ச்சியில் இருக்கிறார்.

ஆனால் தெரியாது
ஆனால் இவரிடம் இன்னும் அகிலேஷ் சர்மாவின் மரணம் குறித்து தெரிவிக்கப்படவில்லை. இவர் கர்ப்பமாக இருப்பதால், அவரிடம் இதை சொல்வது சரியாக இருக்காது. அதிர்ச்சியில் பிரசவத்திற்கு ஏதாவது ஆகலாம் என்று அவரிடம் இதை சொல்லவில்லை. இன்னும் அகிலேஷ் சர்மாவின் மரணம், அவரின் மனைவிக்கு தெரிவிக்கப்படவில்லை .

நிலைமை மோசம்
தன்னுடைய கணவர் உயிரோடு இருப்பதாகவும். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டு இருப்பதாகவும் அகிலேஷ் சர்மாவின் மனைவி மேக்நா நினைக்கிறார். அகிலேஷ் சர்மாவின் தம்பி தற்போது கோழிக்கோடு சென்றுள்ளார். இவர் தனது அண்ணனின் உடலை கோழிக்கோட்டில் இருந்து உத்தர பிரதேசத்திற்கு எடுத்து வர உள்ளார் என்கிறார்கள்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications