கேரளாவில் கன மழையால் நிலச்சரிவு.. குழந்தைகள் உட்பட 7 பேர் பலியான சோகம்
Recommended Video

கோழிக்கோடு: கேரள மாநிலத்தில் நிலச்சரிவில் சிக்கி 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளளனர்.
கேரள மாநிலத்தில் தென் மேற்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக பல இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.

தொடர் மழையால் கோழிக்கோடு மாவட்டம் தாமரைச்சேரி உள்ளிட்ட சில பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் மலைச்சரிவில் இருந்த பல வீடுகள் மற்றும் வயலில் பயிரிடப்பட்ட பயிர்கள் அடித்துச்செல்லப்பட்டன. பல இடங்களில் வீடுகள் கடுமையாக சேதம் அடைந்தன.
நிலச்சரிவில் சிக்கி 3 குழந்தைகள் உள்பட 7 பேர் இறந்தனர். 9 பேர் மாயமானார்கள். சிறப்பு தேசிய பேரிடர் மீட்பு படையினருக்கு மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்தது.

அதன்படி 50 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் அங்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். நிலச்சரிவில் சிக்கிய 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. மாயமான 9 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications