மற்ற மாநிலங்களை போல ஆட்சி அமைப்பதில் முறைகேடு கூடாது- குமாரசாமி
பெங்களூர்: கோவா, மணிப்பூர், மேகாலயா ஆகிய மாநிலங்களில் ஏற்பட்டது போல் ஆட்சி அமைப்பதில் கர்நாடகத்திலும் முறைகேடு நடைபெற்று விடக் கூடாது என்று குமாரசாமியும் காங்கிரஸ் மாநில தலைவர் பரமேஸ்வராவும் தெரிவித்தனர்.
கர்நாடகத்தில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் காங்கிரஸ் - ஜேடிஎஸ் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளது. இதுதொடர்பாக 117 எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்துடன் ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநர் மாளிகைக்கு காங்கிரஸ் மற்றும் மஜத எம்எல்ஏக்கள் சென்றனர்.

அங்கு ஆளுநரிடம் கடிதத்தை அளித்துவிட்டு குமாரசாமியும் , காங்கிரஸ் மாநில தலைவர் பரமேஸ்வர் ஆகியோர் கூட்டாக பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் 117 எம்.எல்.ஏக்களின் ஆதரவு கடிதத்தை ஆளுநரிடம் தந்தோம்.
தேர்தலுக்கு பிந்தைய கூட்டணிக்கு பெரும்பான்மை உண்டு. இதனால் ஆட்சி அமைக்க எங்களைத்தான் ஆளுநர் அழைக்க வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்புப் படி ஆளுநர் செயல்பட வேண்டும்.
சட்ட வல்லுநர்களுடன் ஆலோசிப்பதாக ஆளுநர் கூறியுள்ளார். மேலும் சரியான முடிவை எடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மற்ற மாநிலங்கள் போல ஆட்சி அமைபதில் முறைகேடு கூடாது. அரசியல் சாசன சட்டத்துக்குட்பட்டு ஆளுநர் நடக்க வேண்டும்.
இரு கட்சி எம்எல்ஏக்களும் யாரும் அணி தாவவில்லை. மஜதவுக்கு காங்கிரஸ் நிபந்தனையற்ற ஆதரவை தந்துள்ளது என்று அவர்கள் தெரிவித்தனர்.
-
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications