தயாராக இருங்க.. இந்த 2-ல் எதுவேணாலும் நடக்கும்.. எப்போதும் அழுது வடியும் குமாரசாமியின் பகீர் பேச்சு!
மாண்டியா: கர்நாடகத்தில் விரைவில் ஆட்சி கவிழும். எனவே இடைத்தேர்தலோ அல்லது பொதுத் தேர்தலோ நிச்சயம் நடைபெறும் என முன்னாள் முதல்வர் குமாரசாமி பகீர் கிளப்பியுள்ளார்.
கர்நாடகத்தில் கடந்த ஆண்டு நடந்த தேர்தலின் போது யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதையடுத்து குதிரை பேரம் நடத்தி பாஜக ஆட்சி அமைத்துவிடக் கூடாது என்பதால் குறைந்த எண்ணிக்கையில் வெற்றி பெற்ற மஜத ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு தெரிவித்தது.
இதையடுத்து குமாரசாமி முதல்வராக பதவியேற்றார். அதிகார போட்டி, அமைச்சரவையில் இடம் உள்ளிட்டவற்றை காரணம் காட்டி 16 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ததால் இந்த ஆட்சி 14 மாதங்களே நீடித்தது. பின்னர் நம்பிக்கை வாக்கெடுப்பில் கவிழ்ந்து குமாரசாமி பதவி விலகினார்.

முன்னாள் முதல்வர் குமாரசாமி
இந்த நிலையில் கர்நாடகத்தில் பிஎஸ் எடியூரப்பா தலைமையிலான ஆட்சி கடந்த வாரம் பதவியேற்றது. இந்த நிலையில் இன்றைய தினம் மாண்டியாவில் கட்சி தொண்டர்கள் மத்தியில் முன்னாள் முதல்வர் குமாரசாமி பேசினார்.

17 எம்எல்ஏக்கள்
அப்போது குமாரசாமி தொண்டர்கள் மத்தியில் பேசினார். அவர் பேசுகையில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட 17 எம்எல்ஏக்களின் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படலாம்.

அரசு நீடிக்காது
224 தொகுதிகளுக்கும் புதியதொரு தேர்தல் நடத்தப்படலாம். எனவே எதற்கும் தயாராக இருங்கள். புதிதாக பொறுப்பேற்ற அரசு நிச்சயம் நீடிக்காது என குமாரசாமி பேசியுள்ளார்.

ஜனநாயகம்
எப்போதும் அழுது வடிந்து பேசும் குமாரசாமி தன்னம்பிக்கையுடன் பேசியது தொண்டர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குமாரசாமி சொல்வதை போல் நடந்தால் மட்டுமே ஜனநாயகம் தழைத்தோங்கும் என தொண்டர்கள் கருதுகின்றனர்.
-
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications