Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சில நிமிடங்களில் எரிந்து எலும்புக்கூடான பேருந்து.. சிறு தீப்பொறியே காரணம்.. விபத்து நடந்தது எப்படி?

Subscribe to Oneindia Tamil

கர்னூல்: ஆந்திர மாநிலம் கர்னூல் அருகே இன்று அதிகாலையில் ஆம்னி பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்ததில், அந்தப் பேருந்தில் இருந்த பயணிகள் 25 பேர் உடல் கருகி பலியாகியுள்ளனர். தூங்கிக் கொண்டிருந்த பயணிகள் என்ன நடக்கிறது என்று அறிவதற்குள் துயரம் நடந்து முடிந்துள்ளது. இந்தக் கோர விபத்து எப்படி நிகழ்ந்தது என்பது குறித்த தகவல்கள் வெளியாகி வருகின்றன.

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில், சின்னடிக்கூரு கிராமத்தில் நெடுஞ்சாலையில் இன்று அதிகாலையில் நடந்த விபத்தில், ஆம்னி பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 25 பேர் உயிரிழந்தனர். காவேரி ட்ராவல்ஸ் எனும் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான வால்வோ பேருந்து, ஹைதராபாத்தில் இருந்து பெங்களூர் நோக்கி பயணித்துக் கொண்டிருந்தது.

omni bus fire accident Andhra pradesh

கர்னூல் அருகே கோர தீ விபத்து

இந்த பேருந்து 40க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. இன்று அதிகாலை சுமார் 3 மணியளவில் கர்னூல் மாவட்டம் சின்னடிக்கூரு எனும் கிராமம் அருகே சென்று கொண்டிருந்த போது, பேருந்தின் மீது இருசக்கர வாகனம் ஒன்று மோதி அதன் அடியிலேயே சிக்கிக் கொண்டுள்ளது. பைக், ஆம்னி பேருந்தில் மோதியதில் சிறு தீப்பொறி ஏற்பட்டுள்ளது. இதனால் பேருந்தில் தீ பற்றி எரிந்து மளமளவென பரவ தொடங்கியுள்ளது.

தீப்பற்றியதை உணர்ந்த சில பயணிகள் அலறி அடித்துக்கொண்டு, பக்கவாட்டில் இருந்த ஜன்னல் கண்ணாடிகளை உடைத்துக் கொண்டு பேருந்தில் இருந்து குதித்து வெளியேறியுள்ளனர். அந்த வகையில் 10-க்கும் மேற்பட்டோர் லேசான தீக்காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர். ஆனால், அதிவேகமாக தீ பரவி பேருந்து முழுவதும் எரிய தொடங்கியதால் பலர் வெளியேற முடியால் உள்ளேயே சிக்கிக் கொண்டனர்.

தூங்கிக்கொண்டு இருக்கும்போது

முக்கியமாக அதிகாலை நேரத்தில் தீப்பிடித்ததால் பலர் உறங்கிக்கொண்டு இருந்துள்ளனர். இதனால், என்ன நடக்கிறது என நிலைமையை பலரும் உணர்வதற்குள் தீ பேருந்தை முழுமையாகப் பற்றிவிட்டது. பேருந்து சில நிமிடங்களிலேயே முழுமையாக எரிந்து அடங்கி, எலும்புக்கூடாகியது.

omni bus fire accident Andhra pradesh

இந்த விபத்து தொடர்பாக டிஐஜி கோயா பிரவீன் கூறுகையில், "இருசக்கர வாகனத்துடன் மோதியதில் தீ விபத்து ஏற்பட்டாலும், பேருந்தின் உள்ளே இருந்த எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் பல மரணங்களுக்கு காரணமாக அமைந்தன. பேருந்தின் எரிபொருள் டேங்க் அப்படியே இருந்தது. இதுபோன்ற தீ விபத்துகளைத் தடுக்க அல்லது குறைக்க போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகள் பேருந்தில் இல்லை" என்று தெரிவித்தார்.

சில நிமிடங்களில்

சில நிமிடங்களுக்குள், தீ முழு பேருந்தையும் சூழ்ந்து கொண்டது. இதனால் பல பயணிகள் உள்ளே சிக்கிக்கொண்டனர். 12 பேர் ஜன்னல்கள் வழியாக தப்பிக்க முடிந்தது. அவர்களில் பலருக்கு தீக்காயங்கள் ஏற்பட்டன. தீ வேகமாக பரவியதால் மற்றவர்கள் உடல் கருகி இறந்தனர். மீட்பு மற்றும் தீயணைப்பு பணிகள் காலை முழுவதும் தொடர்ந்தன. மீட்புப் பணிகள் முடிந்த பிறகு சரியான உயிரிழப்பு எண்ணிக்கை உறுதி செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துனர்.

omni bus fire accident Andhra pradesh

இந்த விபத்து தொடர்பாக டாக்டர் சிரி கூறுகையில், இதுவரை 11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன, மற்ற உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. பேருந்தின் கதவு தீ விபத்து ஏற்பட்ட பிறகு சிக்கிக் கொண்டதால் திறக்க முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த விபத்து குறித்து ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு வேதனை தெரிவித்துள்ளார். இந்தக் கோரச் சம்பவத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், மீட்புப் பணிகளை விரைவுபடுத்தவும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு அனைத்து உதவிகளையும் வழங்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+