100 ரூபாய்க்காக ஒரு கொலை...!
லக்னோ: உத்தர பிரதேசத்தில் ரூ.100க்காக ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். அவரை கொலை செய்த ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியின் பேரனை போலீசார் தேடி வருகிறார்கள்.
உத்தர பிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டத்தில் உள்ள எட்மாதவ்லா கிராமத்தைச் சேர்ந்தவர் பப்பு(40). கூலித் தொழிலாளி. அவர் தான் பார்த்த வேலைக்கு கூலி அளிக்குமாறு ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி மேஜர் எம்.எல். உபத்யாயவின் பேரன் ஜெய் க்ரிஷனிடம் கேட்டுள்ளார். ஜெய் பப்புவுக்கு அளிக்க வேண்டிய கூலித் தொகை ரூ.100 ஆகும்.
ஜெய்யோ பப்புவுக்கு உரிய கூலியை அளிக்காமல் வாக்குவாத்தத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் அவர் பப்புவை கீழே தள்ளி அடித்துக் கொன்றுவிட்டு தப்பியோடிவிட்டார். இது குறித்து தகவல் அறிந்த கிராமத்தினர் ஆத்திரம் அடைந்து ஜெய் கிடைக்காததால் அவரது தாத்தாவை தாக்கினர். மேலும் அவரின் வீட்டில் இருந்த பொருட்களை சேதப்படுத்தியதுடன் இரண்டு மோட்டார் சைக்கிள்களுக்கு தீ வைத்தனர்.
ஊர் மக்கள் தாக்கியதில் படுகாயம் அடைந்த உபத்யாய சரோஜினி நாயுடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார் ஜெய் க்ரிஷனை தேடி வருகிறார்கள்.
ஊர் மக்கள் ஆத்திரமடைந்து வன்முறையில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பதட்டம் ஏற்பட்டது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications