எல்லோரும் பாருங்க.. என்ன பேச்சு இது.. மோடியை திரும்பி பார்க்க வைத்த ஒரு எம்பி.. வைரலாகும் வீடியோ!
ஜம்மு காஷ்மீர் பிரிவினை குறித்து லடாக்கை சேர்ந்த பாஜக எம்.பி ஜம்யாங் செரிங் நம்கியால் நாடாளுமன்றத்தில் பேசியது பெரிய வைரலாகி உள்ளது.
Recommended Video
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் பிரிவினை குறித்து லடாக்கை சேர்ந்த பாஜக எம்.பி ஜம்யாங் செரிங் நம்கியால் நாடாளுமன்றத்தில் பேசியது பெரிய வைரலாகி உள்ளது.
காஷ்மீர் பிரச்சனையில் இரண்டு நாட்களுக்கு முன் அதிரடி திருப்பம் நிகழ்ந்தது. ராஜ்ய சபாவில் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு உரிமைகளை வழங்கக் கூடிய அரசியல் சாசனத்தின் 370 பிரிவை நீக்குவதாக மத்திய அரசு அறிவித்தது.
இது இந்தியாவில் மட்டுமில்லாமல் பாகிஸ்தானிலும் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான விவாதம் லோக்சபாவில் நடந்தது. அதில் லடாக்கை சேர்ந்த பாஜக எம்.பி ஜம்யாங் செரிங் நம்கியால் பேசியதுதான் தற்போது பெரிய வைரலாகி உள்ளது.

என்ன பேசினார்
ஜம்யாங் செரிங் தனது பேச்சில், லடாக் குறித்து உங்களுக்கு என்ன தெரியும். நான் லடாக்கில் பிறந்து, அங்கே வளர்ந்து வாழ்ந்து வருகிறேன். எனக்குத்தான் லடாக்கில் என்ன நடந்தது என்று தெரியும். மற்ற இந்திய மாநிலங்களில் போல எங்களின் லடாக் முன்னேற்றம் அடையவில்லை.

இரண்டு குடும்பம்
லடாக்கை இரண்டு குடும்பங்கள்தான் அனுபவித்து வந்தது. மெகபூபா முப்தி மற்றும் உமர் அப்துல்லா ஆகியோர் தங்களை காஷ்மீரின் மன்னர்கள் போல கருதினார்கள். அவர்கள் அங்கு இத்தனை நாட்கள் மாறி மாறி கொள்ளை அடித்தனர். அவர்கள் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை.

கல்லூரி
நாங்கள் நல்ல கல்லூரி இல்லாமல், வீடு இல்லாமல், மருத்துவமனை இல்லாமல் சரியான வேலை வாய்ப்பு இல்லாமல் கஷ்டப்பட்டோம். எங்களுக்கும் முன்னேற வேண்டும் என்று ஆசை இருக்கும். நாங்களும் சாதிக்க வேண்டும். தற்போது அது நடந்து இருக்கிறது.

எப்படி இருந்தது
இத்தனை வருடம் 370 சட்டம் மூலம் காஷ்மீர் முன்னேறாமல் இருந்தது. காஷ்மீருக்கு எதிராக காங்கிரஸ் மிக மோசமாக செயல்பட்டு வந்தது. தற்போது பாஜக ஆட்சி மூலம் தொல்லைகளுக்கு எல்லாம் முடிவு வந்து இருக்கிறது என்று பாஜக எம்.பி ஜம்யாங் செரிங் நம்கியால் பேசினார்.

பெரிய வைரல்
இந்த பேச்சுதான் இணையம் முழுக்க வைரலாகி உள்ளது. பாஜக தலைவர்கள் பலர் இவரை பாராட்டி இருக்கிறார்கள். அதேபோல் இணையத்தில் இவரை பலர் பின்தொடர தொடங்கி இருக்கிறார்கள். இவரின் பேஸ்புக் பேஜ் இணையம் முழுக்க வைரலாகி உள்ளது.
|
மோடி என்ன
இதை பிரதமர் மோடியும் பாராட்டி இருக்கிறார். அதில், இந்த பேச்சு மிக முக்கியமானது, லடாக் சகோதர சகோதரிகளின் குரல்களை அவர்களை வெளிப்படுத்தி உள்ளார். மக்கள் எல்லோரும் இதை கேட்க வேண்டும், என்று மோடி குறிப்பிட்டுள்ளார் .












Click it and Unblock the Notifications