கள்ளக்காதல் விபரீதம் – பிறந்த குழந்தையை டாய்லெட்டில் திணித்த தாய்
கொழிஞ்சாம்பாறை: கேரளாவில் கள்ளக்காதலில் பிறந்த குழந்தையை மனசாட்சியே இல்லாமல் டாய்லெட்டில் திணித்துக் கொன்றுள்ளார் தாயார் ஒருவர்.
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் ஆலத்தூரில் உள்ளது எருமையூர். இங்கு வசித்து வருபவர் பினோஜூ. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இதே பகுதியில் வசித்து வருபவர் சிபிதா. இவருக்கு திருமணமாகி 9 வயதில் மகன் உள்ளான்.
வெளிநாட்டு வேலையில் கணவர்:
சிபிதாவின் கணவர் கடந்த 3 வருடங்களுக்கு முன் வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்றுவிட்டார். இந்நிலையில் பினோஜூக்கும், சிபிதாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.
கள்ளக்காதல் உல்லாசம்:
பின்னர் அதுவே கள்ளக்காதலாக மாறியது. கணவர் வீட்டில் இல்லாததால் சிபிதா கள்ளக்காதன் பினோஜை வீட்டுக்கே அழைத்து வந்து உல்லாசமாக இருந்தார். கணவர் அனுப்பும் பணத்தை கள்ளக்காதல் ஜோடி ஜாலியாக செலவு செய்தது.
குழந்தை பிணம்:
இந்நிலையில் எருமையூர் குளத்தில் பிறந்த குழந்தை பிணமாக கிடப்பதை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து ஆலத்தூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சிசுவின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக பாலக்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தாயை தேடல்:
பிரேத பரிசோதனை அறிக்கையில் பிறந்த 2 நாளே ஆன ஆண் குழந்தை கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் குழந்தையின் தாயை தேடிவந்தனர்.
ஒப்புக் கொண்ட சிபிதா:
விசாரணையில் சிபிதா கர்ப்பமாக இருந்ததும், அதனை மறைக்க அவர் முயன்றதும் தெரியவந்தது. இது குறித்து சிபிதாவிடம் விசாரித்தபோது அவர் உண்மையை ஒப்புக்கொண்டார்.
கர்ப்பமாக்கிய பினோஜூ:
அவர் போலீசில் கூறிய வாக்கு மூலத்தில், "எனது கணவர் கடந்த 3 வருடத்துக்கு முன் வெளிநாடு சென்று விட்டார். மகனுடன் தனியாக வசித்து வந்த எனக்கும், பக்கத்து வீட்டில் வசிக்கும் பினோஜூக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. இதனால் நான் கர்ப்பமானேன். எங்கள் காதல் சின்னமாக குழந்தை இருக்க வேண்டும் என்று நினைத்தோம்.
நினைவுச் சின்னமான குழந்தை:
இந்நிலையில் கணவர் ஊருக்கு வருவதாக கூறினார். கணவர் ஊருக்கு வர இருப்பதால் கருவை கலைக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர் ஊருக்கு வந்து சென்றதும் கர்ப்பமாகி விட்டேன். குழந்தை குறைப்பிரசவத்தில் பிறந்துவிட்டது என்று கூறிவிடலாம் என்று நினைத்தோம். சந்தோஷமாக காதல் நினைவுச்சின்னமாக கருவை வளர்த்து வந்தேன்.
கனவைக் கலைத்த கணவர்:
சில நாட்கள் கழிந்து திடீரென கணவர் தற்போது ஊருக்கு வரமுடியாது என்று குண்டை தூக்கிபோட்டார். அதிர்ச்சியடைந்த நாங்கள் கருவை கலைக்க டாக்டரிடம் சென்றோம். கரு நன்கு வளர்ந்து விட்டதால் இனி கலைக்க முடியாது என்று கூறிவிட்டனர்.
வயிற்றை மறைத்தேன்:
இதனால் அக்கம் பக்கத்தினருக்கு வயிறு பெரிதாக தெரியாமல் இருக்க வயிற்றை சேலையால் இறுக்கி கட்டியும், மார்டன் துணிகளை அணிந்தும் மறைத்து வந்தேன்.
ஆண் குழந்தை:
சம்பவத்தன்று வலி ஏற்பட்டு ஆண் குழந்தை பிறந்து விட்டது. குழந்தையை என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தேன். கணவர் வந்தால் கொன்றே விடுவார் என்று பயந்தேன். இது குறித்து கள்ளக்காதலன் பினோஜிடம் தெரிவித்தேன். அவரும் உடனே வீட்டுக்கு வந்தார்.
கழுத்தை நெரித்துக் கொலை:
வேறு வழியில்லாமல் குழந்தையின் கழுத்தை நெரித்து கொலை செய்தேன். குழந்தையின் உடலை டாய்லெட் பேஷன் குழிக்குள் திணித்து அது செப்டிக் டேங்கில் விழுமாறு தண்ணீரை ஊற்றினேன்.
கைது செய்த போலீஸ்:
ஆனால் குழந்தையின் உடல் உள்ளே செல்லவில்லை. வேறு வழியின்றி அருகில் உள்ள குளத்தில் வீசிவிட்டேன். இதற்கு உடந்தையாக பினோஜூம் இருந்தார்" என்று கூறினார்.
இதையடுத்து போலீசார் கள்ளக்காதல் ஜோடியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
என்ன கல்நெஞ்சமோ!
-
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications