விஜயாவுக்கு இப்படி ஒரு கதியா.. நல்ல மனசுக்கார பெண்.. சத்தமா கூட பேச மாட்டார்.. சோகத்தில் உறவினர்கள்
தாசில்தார் கொலை செய்யப்பட்டதில் உறவினர்கள் சோகத்தில் உள்ளனர்.
Recommended Video
நல்கொண்டா: விஜயா ரெட்டி அதிர்ந்து கூட பேச மாட்டார். அத்தனை நல்ல மனசு உள்ள பெண். சமூக சேவையில் அதிக நாட்டம் உடையவர். அவருக்கு இப்படி ஒரு கதியா என்று அவரது உறவினர்கள், நண்பர்கள், பள்ளி ஆசிரியர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
விஜயா ரெட்டி பணியாற்றியது ரெங்கா ரெட்டி மாவட்டம் என்றாலும் கூட அவரது குடும்பத்தினரின் பூர்வீகம் நல் கொண்டா மாவட்டம்தான். நல் கொண்டா மாவட்டம் பெரிகாகொண்டாரம் என்ற கிராமம்தான் விஜயா ரெட்டியின் தந்தை லிங்கா ரெட்டியின் பூர்வீகம். அவர் ஓய்வு பெற்ற ஆசிரியர்.
பணி நிமித்தம் மாவட்டத்தின் பல பகுதிகளில் பணியாற்றிய அவர் கடைசியாக 20 வருடங்களுக்கு முன்பு அதே மாவட்டத்தின் நக்ரேகல் கிராமத்தில் செட்டிலானார்.

ஆசிரியை
விஜயா ரெட்டிக்கு நேர்ந்த கதியால் நல்கொண்டா மாவட்டம் அதிர்ச்சியில் உறைந்துள்ளது. விஜயா ரெட்டி படித்ததெல்லாம் நக்ரேகல்லில்தானாம், கல்லூரிப் படிப்பை நல்கொண்டாவில் முடித்துள்ளார். பிஎட் படித்துள்ளார். ஆரம்பத்தில் ஆசிரியையாக பணியாற்றியுள்ளார்.

காலேஜ்
2008ம் ஆண்டு இவருக்கும் கல்லூரி ஆசிரியர் புட்ட சுபாஷ் ரெட்டிக்கும் திருமணம் ஆனது. 2011ல் டெபுட்டி தாசில்தாராக பணியில் சேர்ந்தார். குரூப் 2 தேர்வு எழுதி இந்தப் பணிக்கு வந்தார். தான் டெபுடி தாசில்தார் ஆனதும் தான் படித்த பள்ளிக்குப் போய் அனைவருக்கும் இனிப்பு கொடுத்து மகிழ்ந்துள்ளார்.

சமூக சேவை
இதுகுறித்து அவர் படித்த ஏவிஎம் பள்ளி ஆசிரியர் ஸ்ரீனிவாஸ் கூறுகையில் "நல்லா படிப்பார். அமைதியானவர், சமூக சேவையில் அதிக நாட்டம் கொண்டவர். அவருக்கு ஏற்பட்ட முடிவால் அதிர்ச்சியில் உள்ளோம். இதை எதிர்பார்க்கவே இல்லை என்றார்.

கலக்கம்
தனது மகளுக்கு ஏற்பட்ட கோர முடிவால் விஜயாவின் தந்தை லிங்கா ரெட்டி பெரும் வேதனையில் ஆழ்ந்துள்ளார். அவரால் மகள் இப்படி கருகிப் போய் உயிரிழந்ததை தாங்கவே முடியலையாம். அவரை தேற்ற வழி தெரியாமல் உறவினர்கள் கலங்கிப் போயுள்ளனர். விஜயாவின் தாயாரும் இடிந்து போய் அழுதபடி உள்ளாராம்.
விஜயா - சுபாஷ் ரெட்டி தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இருவருமே அம்மாவின் உடல் கூட மிஞ்சாத அளவுக்கு கருகிப் போய் கொடூரமாக பலியானதை நினைத்து அழுதபடி உள்ளனராம்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications