Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டெல்லி ஜேஎன்யூ மாணவர் சங்க தேர்தலில் இடதுசாரி மாணவர் கூட்டமைப்பினர் வெற்றி.. ஏபிவிபியும் முன்னேற்றம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லியின் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் (Jawaharlal Nehru University ஜேஎன்யூ JNU) மாணவர் சங்கத் தேர்தலில் முக்கிய பதவிகளை இடதுசாரி மாணவர்கள் கூட்டமைப்பினர் கைப்பற்றியுள்ளனர். ஜேஎன்யூ மாணவர் சங்கத்தின் தலைவராக இடதுசாரியான நிதிஷ்குமார் வெற்றி பெற்றுள்ளார். பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவியின் வைபவ் மீனா, இணைச் செயலாளராக வெற்றி பெற்றுள்ளார்.

கல்வித் துறையில் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம் மிக முக்கியமான இடம் வகிக்கிறது. நாட்டின் புகழ்பெற்ற வலது மற்றும் இடதுசாரி அரசியல் தலைவர்கள் பலரையும் உருவாக்கிய கல்வி நிலையம்தான் இந்த ஜேஎன்யூ.

JNU

ஜேஎன்யூ மாணவர் சங்கத் தேர்தல் எப்போதும் மிக முக்கியமான ஒன்றாக கவனிக்கப்படுகிறது. இப்பல்கலைக் கழகத்தின் மாணவர் சங்கத்தேர்தலில் பெரியாரிய- அம்பேத்கரிய- இடதுசாரி ஆதரவு மாணவர்கள் ஒரு அணியாகவும் வலதுசாரி பாஜக ஆதரவு மாணவர்கள் ஒரு அணியாகவும் மோதுவது வழக்கம்.

இந்த தேர்தல்களில் பொதுவாக இடதுசாரி மாணவர்கள்தான் வென்று வந்தனர். அதேநேரத்தில் வலதுசாரியான பாஜகவின் ஏபிவிபி, இடதுசாரி மாணவர்களுக்கு கடும் போட்டியை ஒவ்வொரு தேர்தலிலும் தந்து கொண்டிருக்கிறது.

இந்த ஆண்டு ஜேஎன்யூ மாணவர் சங்கத்தேர்தலில் இடதுசாரிகள் கூட்டமைப்பினர் தலைவர் பதவி உள்ளிட்ட 3 முக்கிய பதவிகளைக் கைப்பற்றினர்.

ஜேஎன்யூ மாணவர் சங்கத் தலைவராக இடதுசாரி கூட்டமைப்பின் நிதிஷ்குமார் வெற்றி பெற்றார். பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவியின் வைபவ் மீனா, இணை செயலாளர் பதவியைக் கைப்பற்றினார். ஜேஎன்யூ மாணவர் சங்கத்தின் துணைத் தலைவராக இடதுசாரி கூட்டமைப்பின் மணீஷா, பொதுச்செயலாளராக முன்தேகா ஆகியோர் வெற்றி பெற்றனர்.

கடந்த 10 ஆண்டுகளில் முதல் முறையாக ஜேஎன்யூ தேர்தலில் ஏபிவிபி வெற்றியை ருசித்திருக்கிறது. இது இடதுசாரி மாணவர் கூட்டமைப்பினருக்கு பின்னடைவாகவும் பார்க்கப்படுகிறது.

ஜேஎன்யூ தேர்தல் வெற்றியை இடதுசாரி மாணவர்களும் வலதுசாரி பாஜகவின் ஏபிவிபி மாணவர்களும் கொண்டாடும் வகையில் போட்டி போட்டு பேரணிகளை நடத்தினர்.

ஜேஎன்யூவும் போராட்டங்களும்

ஜேஎன்யூவின் வரலாறு நெடுக மிகப் பெரும் போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. அவசரநிலை காலத்தில் ஜேஎன்யூ மாணவர்கள் உக்கிரமான போராட்டங்களை நடத்தி அடக்குமுறைகளை எதிர்கொண்டனர்.

வலதுசாரி சித்தாந்தத்தின் கை ஓங்கும் போதெல்லாம் ஜேஎன்யூவில் கிளர்ச்சி வெடிக்கும். மத்திய பாஜக அரசு குடியுரிமை திருத்தச் சட்டம் கொண்டு வந்த போது அதை எதிர்த்து தீவிரப் போராட்டத்தை 2020-ல் ஜேஎன்யூ மாணவர்கள் முன்னெடுத்தனர். அப்போது பாஜகவின் ஏபிவிபி மாணவர் அமைப்பினர், போராடிய ஜேஎன்யூ மாணவர்கள் மீது கொடூரத் தாக்குதல்களை நடத்தியது. ஜேஎன்யூ மாணவர் சங்கத் தலைவராக இருந்த கோஷ் மண்டையை உடைத்தனர் ஏபிவிபியினர். இதனால் அவருக்கு தலையில் 16 தையல்கள் போடப்பட்ட துயரம் நடந்தது.

அதேபோல ஜேஎன்யூவின் மாணவர்களின் கல்வியைப் பாதிக்கும் வகையில் கட்டணங்கள் கடுமையாக உயர்த்தப்பட்டன. இதற்கு எதிராகவும் மாணவர்கள் தீவிரப் போராட்டம் நடத்தி கட்டண உயர்வைத் திரும்பப் பெற வைத்தனர். மேலும் ஜேஎன்யூவின் துணைவேந்தராக சாந்திஶ்ரீ நியமிக்கப்பட்ட போது அவர் ஒரு வலதுசாரி என்பதால் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். ஜேஎன்யூவில் இடதுசாரி மாணவர்கள் என்பது அம்பேத்கர், பெரியார், இடதுசாரி தத்துவங்களை பின்பற்றும் அனைவரையும் உள்ளடக்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+