"மோதி மோதி மோதி"... மோடியை லாலு எப்படிக் கிண்டலடிக்கிறார் பாருங்கள்!
பாட்னா: லாலு பிரசாத் யாதவ் ஒரு போதும் சீரியஸ் அரசியல்வாதியாக இருந்ததில்லை. சீரியஸான விஷயத்தையும் கூட ஜாலியாக கையாளுவார். இப்போது பிரதமர் நரேந்திர மோடியை அவர் வாரியுள்ளார்.
சமீபத்தில் பாட்னாவுக்கு வருகை தந்த பிரதமர் மோடி பீகார் மாநிலத்திற்கு சிறப்பு நிதியை அறிவித்தார். இதைத்தான் கிண்டலடித்துள்ளார் லாலு பிரசாத் யாதவ்.
Lalu Prasad Yadav mimics PM Narendra Modi while giving a speech in Patna pic.twitter.com/GjtUH1Ey3y
— ANI (@ANI_news) August 19, 2015 இதுகுறித்து கட்சியின் பிரசாரக் கூட்டம் ஒன்றில் அவர் பேசுகையில் மோடியின் பேச்சையும், அவரது அறிவிப்பையும், அவருக்கு ஆதரவாக பாஜகவின் மாணவர் பிரிவான அகில இந்திய வித்யார்த்தி பரிஷத் அமைப்பினர் போடும் கோஷத்தையும் கிண்டலடித்துப் பேசினார் லாலு.
பீகார் மாநிலத்திற்கு நிதியுதவி அளித்ததைக் குறிப்பிட்ட லாலு, மோடி பேசியதைப் போல பேசி கிண்டலடித்தார். அத்தோடு நில்லாத அவர் அவர் எதைச் சொன்னாலும் கூடவே மோதி மோதி மோதி என்று இந்த வித்யார்த்தி பரிஷத் அமைப்பினர் கோஷம் போடுகிறார்கள் என்று கிண்டலடிக்கவே கூட்டம் ஆர்ப்பரித்துச் சிரித்தது.
சில நாட்களுக்கு முன்பு டிவிட்டரில் லாலு பேசுகையில், நரேந்திர மோடி பிரதமர் பதவிக்கு பெரும் இழுக்காக மாறியுள்ளார். அவரைப் பார்த்து அனைவரும் சிரிக்கின்றனர் என்று கூறியிருந்தார்.
மேலும் அவர் கூறுகையில் பீகார் தேர்தல் மண்டல் ராஜ் 2 மற்றும் ஜங்கிள் ராஜ் 2க்கு இடையிலான போராகும். இதில் மண்டல் ராஜ் 2 தான் வெல்லும். காட்டாட்சி விரட்டப்படும் என்று கூறினார் லாலு.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications