மாட்டுத் தீவன ஊழல்.. 4வது வழக்கில் லாலு பிரசாத் யாதவுக்கு 7 ஆண்டுகள் சிறை
மாட்டு தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத் யாதவுக்கு மேலும் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
ராஞ்சி: மாட்டு தீவன ஊழல் வழக்கில் பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவுக்கு மேலும் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ராஞ்சி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கடந்த 1996-ஆம் ஆண்டு பீகார் மாநில முதல்வராக இருந்த போது கால்நடைகளுக்கான தீவனம் கொள்முதல் செய்ததில் லாலு பிரசாத் உள்ளிட்டோர் கையாடல் செய்ததாக 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இவற்றுள் 3 ஊழல் வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கப்பட்டுவிட்டது.

இந்நிலையில் தும்கா கருவூலத்தில் மாட்டு தீவன கொள்முதல் தொடர்பாக ரூ.3.76 கோடி முறைகேடு செய்ததாக பீகார் மாநில முன்னாள் முதல்வர்கள் லாலு பிரசாத், ஜெகன்னாத் மிஸ்ரா உள்ளிட்டோர் மீது சிபிஐ வழக்கு தொடரப்பட்டது.
இந்த 4-ஆவது ஊழல் வழக்கு விசாரணை கடந்த 19-ஆம் தேதி ராஞ்சி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது லாலு குற்றவாளி என்று கூறிய நீதிபதி, ஜெகனனாத் மிஸ்ராவை விடுவித்து உத்தரவிட்டார். மேலும் தண்டனை விவரங்கள் மார்ச் 24-இல் அறிவிப்பதாக நீதிபதி கூறியிருந்தார்.
இந்நிலையில் இன்று மாட்டு தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத்துக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ராஞ்சி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மொத்தம் மாட்டு தீவன ஊழல் தொடர்பான 5 வழக்குகளில் ஏற்கெனவே 3 வழக்குகளில் 13.5 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 4-ஆவது வழக்கில் 7ஆண்டுகள் விதிக்கப்பட்டுள்ளது. இது லாலுவுக்கு கிடைத்த பெரும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications