மதவாதத்தை வேரறுக்க எத்தகைய கொடிய விஷத்தையும் குடிக்க தயார்: லாலு ஆவேசம்
டெல்லி: நாட்டில் மதவாதம் எனும் கொடிய நச்சுப் பாம்பை அழித்தொழிக்க விஷத்தையும் கூட குடிக்க தயாராக இருக்கிறேன் என்று ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் கூறியுள்ளார்.
பீகார் மாநில சட்டசபைக்கான தேர்தல் வரும் செப்டம்பர் அல்லது அக்டோபரில் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கு எதிராக ஆளும் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகியவை கூட்டணி அமைக்க முயற்சித்தன.
ஆனால் ஐக்கிய ஜனதா தளம்- ராஷ்டிரிய ஜனதா தளம் இடையே திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து டெல்லியில் சமாஜ்வாடி தலைவர் முலாயம்சிங் யாதவ் முன்னிலையில் பீகார் முதல்வர் நிதிஷ், ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இப்பேச்சுவார்த்தை முடிவில், மூன்று கட்சிகளும் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்ள இணக்கம் ஏற்பட்டது. மேலும் இக்கூட்டணியின் சார்பில் முதல்வர் வேட்பாளராக நிதிஷ்குமார் அறிவிக்கப்பட்டார். இந்த அறிவிப்பு வெளியிடப்பட்ட செய்தியாளர்கள் சந்திப்பில் லாலு பிரசாத் கூறியதாவது:

முதல்வர் பதவி போட்டியில்லை
நான் முதல்வர் பதவிக்கு போட்டியிட விரும்பவில்லை. அதேபோல் என் குடும்பத்தினரும் போட்டியிடவில்லை. எங்களைப் பொறுத்தவரையில் மதவாத சக்திகள் எந்த வகையிலும் ஆதாயம் அடைந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறோம்.

விஷத்தையும் குடிப்பேன்
அனைத்து மதச்சார்பற்ற சக்திகளும் ஒருங்கிணைவதற்கான எதை வேண்டுமானாலும் செய்ய தயாராக இருக்கிறேன். இந்த நாட்டில் மதவாதம் எனும் நச்சுப் பாம்பை நசுக்க வேண்டும்.. இதற்காக நான் எந்த விஷத்தையும் கூட குடிக்க தயாராக இருக்கிறேன். அவர்களை பீகார் மண்ணைவிட்டே விரட்ட வேண்டும்.

காங்கிரஸும் வரனும்
எனக்கும் நிதிஷ்குமாருக்கும் முதல்வர் வேட்பாளர் தொடர்பாக எந்த ஒரு கருத்து வேறுபாடும் இல்லை. ராஜ்யசபா தேர்தலில் ஐக்கிய ஜனதா தளத்துக்கு ஆதரவாக இருந்தோம் நாங்கள்... நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளத்துடனான கூட்டணி என்பது காலத்தின் தேவை.
காங்கிரஸ் கட்சியுடன் எங்களுக்கு எந்த விரோதமும் இல்லை. காங்கிரஸ் கட்சி எங்களுடன் கூட்டணி அமைப்பதில் என்ன தவறு இருக்கிறது?

பெவிலியனுக்கு பாஜக..
நிதிஷ்குமாரை மீண்டும் முதல்வராக்குவதற்கான யுத்தம் இது. பாரதிய ஜனதா கட்சியை ஒருபோதும் வெல்ல விடமாட்டோம்...அந்த கட்சியை பெவிலியனுக்கே திருப்பி அனுப்புவோம்.
இவ்வாறு லாலு பிரசாத் யாதவ் கூறினார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications