லாலு பிரசாத் யாதவுக்கு இதய அறுவை சிகிச்சை தேவை: டாக்டர்கள்
மும்பை: மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவுக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பீகார் முதல்வரும், ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவருமான லாலு பிரசாத் யாதவ் உடல் நலக்குறைவு காரணமாக மும்பையில் உள்ள ஏசியன் ஹார்ட் இன்ஸ்டிடியூட் மருத்துவமனையில் திங்கட்கிழமை அனுமதிக்கப்பட்டார்.
அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

இது குறித்து மருத்துவமனையின் மெடிக்கல் டைரக்டரான மருத்துவர் விஜய் டிசில்வா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
பொதுவாக லாலுஜி ஆரோக்கியமான மனிதர். அவர் தீவிர பிரச்சாரம் செய்ததில் இருந்தே அது தெரிகிறது. அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டி உள்ளது. அவருக்கு செய்யப்பட்ட பரிசோதனைகள் சிலவற்றின் முடிவு வர வேண்டி இருக்கிறது. அது வந்த பிறகே அவருக்கு எந்த வகையான சிகிச்சை தேவைப்படும் என்று தெரிய வரும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
பீகாரில் நடந்த இடைத்தேர்தலையொட்டி லாலு தீவிரமாக பிரச்சாரம் செய்தார். ஆனால் அவர் சாலை வழியாக செல்வதை தவிர்த்து பெரும்பாலும் ஹெலிகாப்டரில் தான் பயணம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications