எப்படியும் பாஜக தோற்கப் போகுது.. உத்தரகாண்டில் யோகிக்கு வீடு கட்ட நிலம் தர ரெடி: ஹரீஷ் ராவத் கிண்டல்
லக்னோ: உத்தர பிரதேச தேர்தலில் தோல்வியடையும் முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு வீடு கட்ட உத்தரகாண்டில் நிலம் வழங்குவேன்'' என காங்கிரஸ் முன்னாள் முதல்வரும், மூத்த தலைவருமான ஹரீஷ் ராவத் கூறினார்.
உத்தர பிரதேசம், கோவா, பஞ்சாப், மணிப்பூர், உத்தரகாண்ட் ஆகிய 5 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் பிப்ரவரி 14ல் கோவா, உத்தரகாண்ட், பிப்ரவரி 20ல் பஞ்சாப் மாநிலங்களுக்கான தேர்தல் முடிவடைந்துள்ளது.
மணிப்பூரில் பிப்ரவரி 28, மார்ச் 3 ஆகிய நாட்களில் இருகட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. உத்தரபிரதேசத்தில் 7 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டதில் பிப்ரவரி 10, 14, 20, 23 என நேற்று வரை 4 கட்ட ஓட்டுப்பதிவு முடிவடைந்துள்ளது. இன்னும் பிப்ரவரி 27, மார்ச் 3, மார்ச் 7 ஆகிய தினங்களில் 3 கட்ட ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது.

உத்தர பிரதேச தேர்தல்
3 கட்ட தேர்தல் நடைபெற உள்ள நிலையில் உத்தர பிரதேசத்தில் ஆளும் பாஜக, எதிர்க்கட்சிகளாக காங்கிரஸ், அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி, மாயாவதியின் பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன. தொடர்ச்சியாக தலைவர்களை தாக்கி பேசி வருகின்றன. இதனால் உத்தர பிரதேச தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் உத்தரகாண்ட் முன்னாள் முதல்வர் ஹரீஸ் ராவத் உத்தரபிரதேச மாநிலம் பிரக்யராஜ் பகுதியில் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது

பிரியங்காவுக்கு ஆதரவு குரல்
காங்கிரஸ் கட்சி எந்த மாநிலங்களிலும் ஆட்சியில் இருக்காது என 1980களில் கூறப்பட்டது. ஆனால் கிராமங்கள் தோறும் இந்திரா காந்திக்கு ஆதரவாக குரல் ஒலித்தது. இந்தியாவில் மீண்டும் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தது. தற்போது உத்தர பிரதேச மாநில மக்கள் அனைவரும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்காவுக்கு ஆதரவாக குரல் கொடுக்கின்றன. இந்த குரல் ஓங்கி ஒலிக்கிறது. இதன்மூலம் மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வரும்.

வீடு கட்ட நிலம்
உத்தரகாண்டில் இருந்து பாஜக கட்சி விரட்டி அடிக்கப்பட்டுள்ளது. இதுதான் உத்தர பிரதேச தேர்தலிலும் நடக்கும். தேர்தல் தோல்விக்கு பின் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரகாண்ட் வந்தால் அவருக்கு வீடு கட்ட நிலம் வழங்குவேன்'' என்றார்.
உத்தரகாண்டில் தற்போது பாஜக ஆட்சி நடக்கிறது. பிப்ரவரி 14ல் சட்டசபை தேர்தல் நடந்தது. உத்தரகாண்ட் உள்பட 5 மாநில தேர்தலில பதிவான ஓட்டுகள் மார்ச் 10ல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இந்த ஓட்டு எண்ணிக்கையின் உத்தரகாண்டில் பாஜக தோல்வியடையும் என்ற அடிப்படையில் தான் அங்கு பாஜக கட்சி விரட்டி அடிக்கப்பட்டுள்ளதாக ஹரீஸ் ராவத் கூறியுள்ளார்.

உத்தர பிரதேசத்தின் சிறப்பு
இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தில் 403 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு ஆட்சியை கைப்பற்றினால் அடுத்து 2024ல் வரும் பாராளுமன்ற தேர்தலுக்கு நிச்சயம் இது பெரிய ஊக்கமாக இருப்பதோடு, அதிக தொகுதிகளை பெற முடியும். ஏனென்றால் உத்தர பிரதேசத்தில் மட்டும் 78 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளது. இதனால் தான் பாஜக, காங்கிரஸ் கட்சிகள் உத்தர பிரதேசத்தில் அதிக கவனம் செலுத்தி வருகின்றன.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications