விஜயவாடா கனகதுர்கா கோயிலில் நிலச்சரிவு.. இடிபாடுகளில் சிக்கிய 4 பேர்!.. மீட்பு பணிகள் தீவிரம்
விஜயவாடா: ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் கனகதுர்கா கோயிலில் நிலச்சரிவு ஏற்பட்டு துப்புரவு பணியாளர்கள் உள்பட 4 பேர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
விஜயவாடாவில் இந்திரா கீழாத்ரி மலைக்குன்றுவில் கனகதுர்கா கோயில் உள்ளது. இந்த கோயிலில் புதன்கிழமை மாலை பல கற்பாறைகள் உருண்டு கோயிலின் கொட்டகை மீது விழுந்தது.

இந்த சம்பவத்தால் 5 பேர் காயமடைந்தனர். இரு துப்புரவு பணியாளர்கள் உள்பட 4 பேர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். சம்பவம் குறித்து தகவலறிந்த மீட்பு படையினர் விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
10 நாட்கள் தசரா திருவிழா கடந்த 17-ஆம் தேதி தொடங்கியது. இந்த கோயிலில் ஏராளமான பக்தர்கள் கூடினர். இந்த அசம்பாவித சம்பவத்தால் மக்கள் பீதியடைந்தனர்.

இந்த சம்பவம் நடைபெறுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாக முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வருவதாக இருந்தது. நிலச்சரிவு ஏற்பட்டதால் அவரது வருகை ஒத்திவைக்கப்பட்டது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications