டெல்லி: காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் சீக்கியர்கள் முற்றுகை பதற்றம்
டெல்லி: சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் பற்றி தவறான தகவலை தெரிவித்ததாக கூறி டெல்லியில் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தை சீக்கியர்கள் முற்றுகையிட்டதால் பதற்றம் ஏற்பட்டது
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி தனது பாதுகாவலராக இருந்த சீக்கியர்களால் 1984 ஆம் ஆண்டு கொல்லப்பட்டதால் ஏற்பட்ட பெரும் கலவரத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் ஜெகதீஷ் டைட்லருக்கு உள்ள தொடர்பு குறித்து விசாரிக்குமாறு டெல்லி நீதிமன்றம் சி.பி.ஐ.க்கு உத்தரவிட்டது.
இதனிடையே டெல்லியில் 1984 ஆம் ஆண்டு சீக்கியர்கள் கொல்லப்பட்டதற்கு காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ஜெகதீஷ் டைட்லருக்கு தொடர்பு கிடையாது என அமிர்தசரஸ் தொகுதியில் நிற்கும் அக்கட்சி வேட்பாளரும் முன்னாள் முதல்வருமான அம்ரீந்தர் சிங் கூறினார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சீக்கியர்கள் டெல்லியிலுள்ள காங்கிரஸ் அலுவலகத்தை இன்று முற்றுகையிட்டனர். அவர்கள் டைட்லர் குற்றமற்றவர் என சான்று வழங்கிய அம்ரீந்தர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோஷம் எழுப்பினர்.
அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த தடுப்பு அரண்களை தாண்ட முயன்றதால் அவர்கள் மீது தண்ணீர் பீய்ச்சியடிக்கப்பட்டது. இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவியது.
கடந்த காலங்களில் சீக்கியர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக காங்கிரஸ் கட்சி டைட்லருக்கு தேர்தலில் போட்டியிட சீட் வழங்க மறுத்தது தற்போது அம்ரீந்தர் வெளியிட்ட கருத்து சீக்கிய அமைப்புகளை மறுபடியும் கோபத்தின் உச்சிக்கு கொண்டு சென்றுள்ளது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட ஒருவர் கூறுகையில், "அம்ரீந்தர் கூறிய கருத்துக்கு நாங்கள் இந்தத் தேர்தலின் மூலம் பதில் தருவோம். நாங்கள் இங்கே முற்றுகையிட்டதற்கு காரணம், காங்கிரஸ்காரர்கள் என்பதால் மட்டுமே.
அம்ரீந்தருக்கு அமிர்தசரஸ் தொகுதியை ஒதுக்கியதற்கும், ஜெகதீஷ் டைட்லருக்கும் நற்சான்று வழங்கியதற்கும் சோனியாவும் ராகுலும் பதில் கூறியாக வேண்டும்" என்றார் அவர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications