Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜம்மு காஷ்மீர்.. புதுச்சேரி ஃபார்முலாவை கையில் எடுத்த பாஜக.. நியமன எம்எல்ஏக்களை வைத்து கேம்

Subscribe to Oneindia Tamil

ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீர் தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. தொடக்கத்தில் இருந்தே தேசிய மாநாடு - காங்கிரஸ் கூட்டணி முன்னிலை வகிக்கிறது. மறுபக்கம் கவர்னரின் நியமன எம்எல்ஏ விவகாரமும் வெடித்து வருகிறது. இந்நிலையில் நியமன எம்எல்ஏ மூலம் பாஜக எப்படி புதுச்சேரியில் ஆட்சியை கவிழ்த்தது என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

ஜம்மு காஷ்மீரில் கடந்த 2014ம் ஆண்டுக்கு பிறகு, தற்போது சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் மாநிலமாக இருந்தது. ஆனால் இப்போது ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமாக உள்ளது. அதோடு சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டுள்ளது. யூனியன் பிரதேசமாக ஜம்மு காஷ்மீர் சந்தித்த முதல் தேர்தல் இதுவாகும்.

haryana assembly election 2024 haryana election 2024 2024 2024

காங்கிரஸ் கட்சியும், முன்னாள் முதல்வர் பாரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சியும் கூட்டணி அமைத்துள்ளது. பாஜகவும், முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தியின் ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சியும் தனித்து களமிறங்கியுள்ள்ளனர்.ஜம்மு காஷ்மீரில் மொத்தம் 90 சட்டசபை தொகுதிகள் உள்ளன. 46 இடங்களில் வென்றால் ஆட்சியை பிடிக்க முடியும்.

மொத்தம் மூன்று கட்டங்களாக ஓட்டுப்பதிவு நடந்து முடிந்தது. இதில் பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. எக்சிட் போல் முடிவுகளில், பெரும்பாலும் தேசிய மாநாடு - காங்கிரஸ் கூட்டணி அதிக இடங்களை பெற வாய்ப்புள்ளதாகவே கூறப்பட்டது.

இது பாஜகவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்பே, 5 பாஜக ஆதரவாளர்கள் கவர்னர் நியமனம் மூலம் எம்எல்ஏவாக நியமிக்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாஜக ஆட்சியமைப்பதற்காக கவர்னர் மனோஜ் சின்ஹா செயல்படுவதாகபுகார் எழுந்துள்ளது.

எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாமல், சட்ட வல்லுநர்களுமே இந்த முடிவை கடுமையாக எதிர்க்கின்றனர். இதுகுறித்து டெல்லி உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி திங்காரா கூறுகையில், தேர்தல் முடிவுகள் வரும் வரை காத்திருக்க வேண்டும். அதற்கு முன்னதாக இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்க வேண்டிய அவசியமில்லை என்றார்.

மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன் கூறுகையில், மத்திய அரசு யூனியன் பிரதேசத்தில் அரசியல் தலையீடு செய்யக் கூடாது. இதுபோன்ற அரசியல் தலையீடு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் செயல்பாட்டை பாதிக்கும். கடந்த காலங்களில் அரசியல் தலையீட்டால் டெல்லி, புதுச்சேரியில் மக்களின் உரிமைகளை எப்படி எல்லாம் பாதித்தது என்று பார்த்துள்ளோம். அதனால் இந்தப் பிரச்னையை கவனமாக கையாள வேண்டும் என்று கூறியுள்ளார்.

புதுச்சேரியில் கவர்னர் கிரண்பேடியால் நியமிக்கப்பட்ட, பாஜக எம்எல்ஏக்கள் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்த்தனர். இதுகுறித்து புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறுகையில், புதுச்சேரி பாஜக தலைவர், செயற்குழு உறுப்பினர், பாஜக உறுப்பினர் ஆகிய 3 பேர் நியமன எம்எல்ஏக்களாக நியமிக்கப்பட்டனர்.

எந்த தகுதியும் இல்லாதவர்களை எம்எல்ஏவாக நியமித்தனர். நியமன எம்எல்ஏ தொடர்பான என்னுடைய பரிந்துரையை நிராகரித்துவிட்டனர். அந்த பாஜக எம்எல்ஏக்க நம்பிக்கை வாக்கெடுப்பில் எங்களுக்கு எதிராக வாக்களித்துவிட்டனர். அதனால் ஒரு வாக்கு வித்தியாசத்தில் எங்கள் ஆட்சியை கவிழ்த்தனர்.

கவர்னர் நியமன எம்எல்ஏ என்பது ஜனநாயகத்தை சிதைக்கும் செயல் என்று கூறியுள்ளார். இந்தக் குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ள புதுச்சேரி முன்னாள் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி, ராஜ்யசபாவில் நியமன எம்பிகள் இருப்பதை போலத்தான் புதுச்சேரியில் நியமன எம்எல்ஏக்கள் நியமிக்கப்பட்டனர். அப்போது உரிய விதிகளை கடைபிடித்துதான் நியமித்தோம்.

இதை எதிர்த்து உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தனர். ஆனால் நான் சட்டப்படி நடந்து கொண்டதால் நீதிமன்றம் நியமன எம்எல்ஏக்கள் விவகாரத்தில் என்னுடைய முடிவில் உடன்பட்டது. என்று கூறியுள்ளார். கடந்த 2016 தேர்தலில் புதுச்சேரியில் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோல்வியடைந்தது.

காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. அதேநேரத்தில் மத்தியில் பாஜக ஆட்சி தொடர்ந்தது. அந்த அதிகாரத்தை பயன்படுத்தி அவர்கள் ஆளுநர் மூலம் பாஜகவினரை நியமன எம்எல்ஏ க்களாக நியமித்தனர். இதன்மூலம் காங்கிரஸ் ஆட்சி கவிழ்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+