மற்ற மாநிலங்களை விடுங்க.. பாஜகவிற்கு மத்திய பிரதேச வெற்றி ஏன் அவ்வளவு முக்கியம் தெரியுமா?
போபால்: மத்திய பிரதேச மாநில சட்டமன்றத் தேர்தல் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் நிலையில், பாஜகவுக்கு அங்கு வெற்றிபெறுவது ஏன் முக்கியம் என்பதை பார்ப்போம்.
இந்திய தலைமை தேர்தல் ஆணையம் கடந்த சில நாட்களுக்கு முன் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம், தெலுங்கானா, ஆகிய 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை அறிவித்தது. அதன்படி மத்திய பிரதேசத்தில் ஒரே கட்டமாக நவம்பர் 7 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. டிசம்பர் 3 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இதில் தேர்தலில் ஆளும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

மத்திய பிரதேசத்தை பொருத்தவரை கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியே வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. ஆனால், பாஜகவின் ஆபரேசன் தாமரை காரணமாக மத்திய பிரதேசத்தில் 2 ஆண்டுகளில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது. தற்போது மத்திய அமைச்சராக உள்ள ஜோதிர் ஆதித்யா சிந்தியா, அப்போது மத்திய பிரதேச காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்தார். தேர்தலில் வென்றவுடன் தனக்கு முதலமைச்சர் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்தார்.
ஆனால், காங்கிரஸ் தலைமை சீனியரான கமல்நாத்தை தேர்வு செய்ததால் அதிருப்தி அடைந்து தனது ஆதரவாளர்களுடன் பாஜகவுக்கு தாவினார். அதன் பின்னர் சிவராஜ் சிங் சவுஹான் மீண்டும் முதலமைச்சரானார். அவரது ஆட்சிகாலம் முடிவடையும் நிலையில், வரும் தேர்தலில் வென்று ஆட்சியை தக்க வைக்க பாஜக தீவிர தேர்தல் பணிகளில் இறங்கியுள்ளது. தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் மத்திய பிரதேசத்தில் மட்டுமே காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.
அதேபோல் மற்ற மாநிலங்களை விட மத்திய பிரதேசத்தில் ஆட்சியை காப்பாற்றுவதே பாஜகவின் முதன்மை குறிக்கோளாக உள்ளது. அதற்கு காரணம், மாநிலத்தின் பெயருக்கு ஏற்றால்போலவே இந்தி பெல்ட் மாநிலங்கள் மத்திய பகுதியாக மத்திய பிரதேசம் உள்ளது. இந்தியாவில் மக்கள் தொகை அதிகம் கொண்ட மாநிலமாகவும் மத்திய பிரதேசம் இருந்து வருகிறது. ஆனால் அங்கு அக்கட்சிக்கு எதிரான மனநிலை அதிகரித்து வருவதுடன், காங்கிரஸ் ஆதரவும் பெருகி வருகிறது. இந்த தேர்தலில் பாஜக தோல்வியடைந்தால் நாடாளுமன்ற தேர்தலில் அதன் பலவீனம் வெளிபட்டுவிடும். எனவே இதில் வெல்வது அக்கட்சிக்கு மிகவும் முக்கியம். வெற்றிபெற்றால் 2024 தேர்தல் பிரதமர் மோடிக்கும் பாஜகவுக்கு பெரிய உத்வேகமாக இருக்கும்.
தொடர்ந்து 4 முறை முதலமைச்சராக இருந்து வரும் சிவராஜ் சிங் சவுஹானுக்கு மாநிலத்தில் எதிர்ப்பு அதிகரித்து இருக்கும் நிலையில், புதிய முதலமைச்சர் வேட்பாளரை முன்னிருத்த நினைக்கும் பாஜக, அதன் மூலம் மக்களவைத் தேர்தலிலும் வாக்குகளை அறுவடை செய்ய நினைக்கிறது. இதெல்லாம் தேர்தல் அக்கட்சி வென்றால் மட்டுமே சாத்தியம். ஏற்கனவே கர்நாடகாவில் ஜேடிஎஸ் - காங்கிரஸ் ஆட்சியை கவிழ்த்தும் பாஜக தோல்விக்கு முக்கிய காரணமாக கூறப்பட்ட நிலையில், மத்திய பிரதேசத்திலும் அக்கட்சி தோல்வியடைந்தால், ஆபரேசன் தாமரையால்தான் அனைத்து நடந்ததாக கருதப்படும்.
இந்த மனநிலை எதிர்க்கட்சியினரிடம் ஏற்பட்டால் மீண்டும் அந்த ஆபரேசனை எதிர்க்கட்சி உறுப்பினர்களிடம் செயல்படுத்த முடியாது. தற்போது பாஜகவின் கோட்டை என்றால் அனைவரும் கண்களை மூடிக்கொண்டு குஜராத் என்று சொல்வோம். அதற்கு முன்பாக பாஜகவின் அசைக்க முடியாத கோட்டையாக திகழ்ந்தது மத்திய பிரதேசம்தான். 1980 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பாஜக, மத்திய பிரதேசத்தில் மட்டுமே 18 ஆண்டுகள் ஆட்சியில் இருந்து உள்ளது. அதாவது பாஜகவை ஒரு பெரிய கட்சியாக இந்தியாவில் அங்கீகரித்ததே மத்திய பிரதேசம்தான்.
இப்படிப்பட்ட பாஜகவின் கோட்டையில்தான் காங்கிரஸ் கடந்த 2018 ஆம் ஆண்டு பெரிய ஓட்டையை போட்டு ஆட்சியை பிடித்தது. ஆனால், இரண்டே ஆண்டுகளில் ஆபரேசன் தாமரையை வைத்து அந்த ஓட்டையை மறைத்து கோட்டையை பிடித்தது பாஜக. ஆனால், தற்போது வரும் பெரும்பாலான கருத்துக்கணிப்பு முடிவுகள் மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியமைக்கும் என்றே தெரிவிக்கின்றன. அதையெல்லாம் பொருட்படுத்தாத பாஜக மோடியின் செல்வாக்கு மற்றும் தங்கள் கட்சிக்கு மாநிலத்தில் இருக்கும் கட்டமைப்பு, உள்ளாட்சித் தேர்தல், இடைத்தேர்தல் வெற்றி போன்றவற்றால் துணிச்சலோடு தேர்தலை எதிர்கொள்கிறது. என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.
-
தங்கத்தை அடகு வைத்து.. அந்த பணத்தில் புதிதாக தங்கம் வாங்கலாமா? மிக ஈஸியாக விளக்கிய ஆனந்த் சீனிவாசன் -
Thaai Kizhavi OTT: சொன்ன தேதிக்கு முன்பு ஓடிடியில் வந்த தாய் கிழவி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு! ட்விஸ்ட் -
வேட்பாளர் லிஸ்டில் பெயர் இல்லை.. அண்ணாமலை இன்று மாலையே முக்கிய மூவ்.. வியந்து போன வானதி.. அசத்தல் -
1988ல் "மக்கள் ஆணையிட்டால்" படத்தில்! விஜயகாந்துக்காக ஸ்டாலின் பாடிய பாடல் இதுதான்! -
கொத்தாக காலியாகும் டெபாசிட்.. தவெக விஜய்க்கு பெரிய சிக்கல்.. 3 பெரிய சர்வேவில் இருக்கும் வார்னிங்! -
திசைமாறிய திருமாவளவன்.. திடீரென தேர்தல் ‘ரிவர்ஸ்’ கியர்.. அப்செட்டான திமுக! இதான் ரியல் காரணம்? -
மகளிர் உரிமை தொகை ரூ.2 ஆயிரம், ரூ.8,000 கூப்பன் வாக்குறுதிகள் என்னை கவர்ந்தது.. நடிகை ரோகிணி! -
ராஜ்யசபா எம்பி சீட் தருவதாக கூறி ஏமாற்றியவர் எடப்பாடி பழனிசாமி! ஆதாரத்தை காட்டி பிரேமலதா விமர்சனம் -
திமுக கூட்டணியின் 'பவர் மேக்னட்' ஆன பிரேமலதா.. ஸ்டாலினின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. என்ன நடந்தது? -
“எங்கள் கைதியாக இருப்பதே உங்க பையனுக்கு பாதுகாப்பு!” அமெரிக்க விமானியின் தாய்க்கு ஈரான் மெசேஜ் -
அறிவார்ந்த அரசியல்வாதி.. சுந்தர்.சி-யால் பயத்தில் இருக்காரு.. பிடிஆரை சீண்டும் பாஜக நிர்வாகி குஷ்பு! -
Tata: டாடா அறக்கட்டளையிலிருந்து விலகினார் "டிவிஎஸ்" வேணு சீனிவாசன்! பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications