பாஜகவின் அசைக்க முடியாத கோட்டை.. 2018லேயே பெரிய ஓட்டை போட்ட காங்கிரஸ்! மத்திய பிரதேச தேர்தல் வரலாறு
போபால்: மத்திய பிரதேச மாநில சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், இதற்கு முன் அம்மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் முடிவுகள் என்ன என்று பார்ப்போம்.
கடந்த சில நாட்களுக்கு முன் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம், தெலுங்கானா, ஆகிய 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை அறிவித்தது. அதன்படி மத்திய பிரதேசத்தில் நவம்பர் 7 ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வாக்குகள் டிசம்பர் 3 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். ஆளும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ் இடையே இந்த தேர்தலில் கடும் போட்டி நிலவி வருகிறது.

தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் மத்திய பிரதேசத்தில் மட்டுமே பாஜக ஆட்சி நடக்கிறது. எனவே இங்கு ஆட்சியை தக்க வைப்பது அக்கட்சி மாநிலங்களை விட மத்திய பிரதேசத்தில் ஆட்சியை காப்பாற்றுவதே பாஜகவின் முதன்மை நோக்கமாக உள்ளது. மற்றொரு காரணம், இந்தியாவில் மக்கள் தொகை அதிகம் கொண்ட மாநிலமாக மத்திய பிரதேசம் இருந்து வருகிறது. தொடர்ந்து 4 முறை முதலமைச்சராக பாஜகவை சேர்ந்த சிவராஜ் சிங் சவுஹான் இருந்து வருகிறார்.
தற்போது பாஜகவின் கோட்டை என குஜராத் கூறப்படுவதைபோல், . அன்று பாஜகவின் அசைக்க முடியாத கோட்டையாக இருந்தது மத்திய பிரதேசம்தான். 1980 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பாஜக, மத்திய பிரதேச மாநிலத்தில் மட்டுமே 18 ஆண்டுகள் ஆட்சியில் இருந்து உள்ளது. 1998 ஆம் ஆண்டு நடைபெற்ற் தேர்தலில் காங்கிரஸ் 172 தொகுதிகளிலும், பாஜக 119 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் 11 இடங்களிலும், இதர 18 இடங்களிலும் வெற்றிபெற்றன. 2000 ஆம் ஆண்டு மத்திய பிரதேசத்தில் இருந்து சத்தீஸ்கர் தனி மாநிலமாக பிரிக்கப்பட்ட பிறகு அங்கு பாஜகவின் கை ஓங்கியது.
2003 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாஜக 173 தொகுதிகளிலும் காங்கிரஸ் 38 இடங்களிலும், பகுஜன் சமாஜ் 2 இடங்களிலும், இதர 18 இடங்களிலும் வெற்றிபெற்றன. 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாஜக 143 தொகுதிகளிலும் காங்கிரஸ் 71 இடங்களிலும், பகுஜன் சமாஜ் 7 இடங்களிலும், இதர 9 இடங்களிலும் வெற்றிபெற்றன. 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாஜக 165 தொகுதிகளிலும் காங்கிரஸ் 58 இடங்களிலும், பகுஜன் சமாஜ் 4 இடங்களிலும், இதர 3 இடங்களிலும் வெற்றிபெற்றன.
இப்படிப்பட்ட பாஜகவின் கோட்டையில்தான் கடந்த 2018 ஆம் ஆண்டு பெரிய ஓட்டையை போட்டு காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. ஆனால், இரண்டே ஆண்டுகளில் பாஜக ஆபரேசன் தாமரையை வைத்து அந்த ஒட்டையை மறைத்து கோட்டையை பிடித்தது பாஜக. ஆனால், தற்போது வரும் பெரும்பாலான கருத்துக்கணிப்பு முடிவுகள் மத்திய பிரதேசத்தில் காங்கிரஸுக்கு சாதகமாகவே என்றே கூறுகின்றன. என்ன நடக்கிறது என்று டிசம்பர் 3 ஆம் தேதி பார்ப்போம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications