லிபியாவில் கடத்தப்பட்ட 2 பேராசிரியர்கள் நிலை என்ன? அரசின் தாமதத்தால் குடும்பத்தார் கலக்கம்
ஹைதராபாத்: கடத்தப்பட்ட இந்தியர்கள் பற்றி சரியான தகவல் பரிமாற்றம் இல்லாததால், ஹைதராபாத்திலுள்ள அவர்கள் குடும்பத்தார் வேதனையடைந்துள்ளனர்.
இந்தியாவை சேர்ந்த 4 இந்தியர்கள் லிபியாவில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டதாக ஊடகங்களில் தகவல் வெளியாகியது. பின்னர் அதில் கர்நாடகாவை சேர்ந்த 2 பேர் விடுதலை செய்யப்பட்டுவிட்டதாகவும், ஹைதராபாத்தை சேர்ந்த கோபி கிருஷ்ணா மற்றும் பல்ராம் கிஷன் ஆகிய இருவர் மட்டும் சிக்கியுள்ளதாகவும் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

ஆனால், அரசு தரப்பில் இருந்து கடத்தப்பட்டதாக கூறப்படும் பேராசிரியர்கள் குடும்பத்திற்கு இதுவரை எந்த தகவலும் தரப்படவில்லை. பல்ராமின் மனைவி ஸ்ரீதேவி செல்போனுக்கு, லட்சுமிகாந்த் என்ற பேராசிரியரின் செல்போனில் இருந்து ஒரு மெசேஜ் வந்துள்ளது. அதில், தாங்கள் எல்லோரும் நலமாக இருப்பதாக மட்டும் கூறப்பட்டுள்ளது.
இந்த லட்சுமிகாந்த் தற்போது விடுவிக்கப்பட்டுவிட்டதாக ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன. ஆனால் பல்ராம் விடுதலையாகவில்லை என்பதே கடைசியாக கிடைத்துள்ள தகவல். எனவே கணவன் தன்னோடு போனில் பேசாதவரை இந்த மெசேஜின் நம்பகத் தன்மையில் சந்தேகம் நிலவும் என்று ஸ்ரீதேவி கூறிவருகிறார்.
கணவர் மற்றும் அவரது நண்பர்கள் ஒருவரையும் தொலைபேசியில் தொடர்புகொள்ள முடியவில்லை என்றும் அவர் கூறுகிறார். கோபி கிருஷ்ணன் வீட்டிலும் இதேபோன்ற படபடப்பு நிலவுகிறது. எனவே ஹைதராபாத்தை சேர்ந்த இரு இந்தியர்களும் விடுதலையாகிவிட்டார்களா இல்லையா என்பதை அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும் என்று அவர்கள் குடும்பத்தார் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications