தமிழக பாணியில் நாகாலாந்து.. 'ரெசார்ட் எம்.எல்.ஏக்கள்' ஆதரவுடன் புதிய முதல்வர் பதவியேற்பு
நாகாலாந்தில் புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட்ட ஷுரோஷெலி லெய்சீட்சு இன்று பதவியேற்றார். அவருக்கு மாநில ஆளுநர் ஆச்சார்யா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
கோஹிமா: நாகாலாந்து மாநிலத்தின் புதிய முதல்வராக நாகா மக்கள் முன்னணி கட்சியைச் சேர்ந்த ஷுரோஷெலி லெய்சீட்சு இன்று பதவியேற்றார்.
நாகாலாந்தில் உள்ளாட்சி தேர்தலுக்காக பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு செய்து அந்த மாநில அரசு உத்தரவு பிறப்பித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், முதல்வர் ஜெலியாங் பதவி விலகக் கோரியும், நாகாலாந்து பழங்குடியினர் நடவடிக்கை குழுவினர் மாநிலம் முழுவதும் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.
அதேசமயம், முதல்வர் ஜெலியாங்குக்கு எதிராக ஆளும் ஜனநாயக கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் 49 பேர் போர்க்கொடி உயர்த்தியதால் அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது.

கூவத்தூரை போன்ற ரிசார்ட்
இதையடுத்து அண்டைய மாநிலமான அசாம் மாநிலத்தில் உள்ள சொகுசு விடுதியில் தங்கி இருந்த எம்.எல்.ஏ.க்கள், மாநில மக்களின் விருப்பத்தின்படி நாகாலாந்து எம்.பி.யும், முன்னாள் முதல்வருமான நெய்பியூ ரியோவை உடனடியாக மீண்டும் முதல்வராக நியமிக்கவேண்டும் என்று கூட்டணி கட்சியின் தலைமையிடம் எழுத்துப்பூர்வமாக கோரிக்கை வைத்தனர்.

உரிமை கோரினார்
இந்த சூழ்நிலையில் முதல்வர் ஜெலியாங் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார். இதையடுத்து நாகா மக்கள் முன்னணியின் புதிய சட்டசபை கட்சி தலைவராக ஷுரோஜெலி லெய்சீட்சு ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கடிதத்துடன் ஆளுநர் பி.பி.ஆச்சார்யாவை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அதனை ஏற்று ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தார்.

பதவியேற்றார்
அதன்படி லெய்சீட்சு தனது அமைச்சரவை பட்டியலை கொடுத்த பின்னர், இன்று ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெற்றது. முதல்வராக ஷுரோஜெலி லெய்சீட்சு பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுநர் ஆச்சார்யா பதவிப்பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். அவருடன் 11 அமைச்சர்களும் பதவியேற்றனர்.

எம்எல்ஏ இல்லை
முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஷுரோஜெலி லெய்சீட்சு (வயது 81) சட்டமன்ற உறுப்பினர் இல்லை என்பதால், அவர் 6 மாதங்களுக்குள் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறவேண்டும். 8 முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட லெய்சீட்சு, 2013ம் ஆண்டு நடந்த தேர்தலில் போட்டியிடவில்லை. இவர் ஆளும் ஜனநாயக கூட்டணியின் தலைவராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications