குடியால் விபரீதம் – மர்மநபர்களால் கொல்லப்பட்ட பெங்களூர் பெண்.. எரிக்க முயன்றதால் பரபரப்பு!
பெங்களூர்: பெங்களூரில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான பெண்ணை கொலை செய்து, உடலை மர்மநபர்கள் எரிக்க முயன்ற பயங்கர சம்பவம் நடந்து உள்ளது.
பெங்களூர் ஜே.பி.நகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட ஜரகனஹள்ளியை சேர்ந்தவர் ஜெயம்மா.
இவருக்கு 2 மகளும், ஒரு மகனும் உள்ளனர். ஜெயம்மா கூலி வேலை செய்து வந்தார்.
மது அருந்தும் பழக்கம்:
அவருக்கு மதுஅருந்தும் பழக்கம் இருந்ததாகவும், தினமும் ஜெயம்மா மதுகுடிப்பதை வழக்கமாக கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.
விநாயகர் பூஜை:
நேற்று முன்தினம் ஜரகனஹள்ளி பகுதியில் உள்ள விநாயகர் சிலைக்கு நடந்த சிறப்பு பூஜையில் கலந்துகொள்ள ஜெயம்மா சென்றிருந்தார்.
வீடு திரும்பவில்லை:
ஆனால் நள்ளிரவு ஆகியும் அவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. உடனே ஜெயம்மாவை, அவரது மகள், மகன் அக்கம் பக்கத்தில் தேடியும், விசாரித்தும் பார்த்தார்கள்.
கொடூரக் கொலை:
ஆனால் அவரை பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்த நிலையில், நேற்று காலையில் அதே பகுதியில் உள்ள அரசு உயர் நிலைப்பள்ளி வளாகத்தில் தலை நசுங்கி நிலையிலும், உடல் பாதி எரிந்த நிலையிலும் ஜெயம்மா கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.
போலீசாருக்கு தகவல்:
ஜெயம்மா கொலை செய்யப்பட்டு கிடப்பதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து ஜே.பி. நகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே போலீசார் விரைந்து வந்து ஜெயம்மா உடலை கைப்பற்றி விசாரித்தனர்.
தீவிர விசாரணை:
அப்போது ஜெயம்மாவின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த மர்மநபர்கள், அவரது உடலை யாரும் அடையாளம் கண்டுபிடிக்காமல் இருப்பதற்காக தீவைத்து எரிக்க முயன்றதும் தெரியவந்தது. இதுகுறித்து, போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications