"ஆனா இது புதுசா இருக்குண்ணே".. அடிபம்பை அடிச்சா தண்ணீருக்கு பதில் சாராயம்.. போலீஸார் அதிர்ச்சி
போபால்: மத்திய பிரதேசத்தில் உள்ள ஒரு கிராமத்தில் அடிபம்பை அடித்தால் தண்ணீருக்கு பதிலாக சாராயம் கொட்டுவதை பார்த்து போலீஸார் அதிர்ச்சியில் உறைந்தனர்.
இந்த நூதன ஐடியாவை கொண்டு கள்ளச்சாராயம் விற்று வந்த கும்பலை போலீஸார் வலைவீசி தேடி வருகின்றனர்.
மேலும், இதுபோல வேறு எங்கெல்லாம் சாராய அடிபம்பை கள்ளச்சாராய கும்பல் நிறுவியிருக்கிறது என்பது குறித்த விசாரணயைில் போலீஸார் இறங்கி இருக்கின்றனர்.

நாட்டில் மதுபானங்களால் ஏற்படும் பிரச்சினை ஒருபக்கம் இருக்க, கள்ளச்சாராயத்தால் மறுபுறம் பெரிய களேபரங்களும், அவலங்களும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. இந்தியாவில் பல்வேறு கிராமங்களில் கள்ளச்சாராய விற்பனை கொடிக்கட்டி பறக்கிறது. மதுபானங்களை ஒப்பிடும் போது, மலிவான விலையில் கிடைப்பதாலும், போதை அதிகமாக இருப்பதாலும் கிராமப்புறங்களில் கள்ளச்சாராயத்தை வாங்க மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இதனை பயன்படுத்தி, சில கும்பல் கண்ட கண்ட ரசாயனங்களை பயன்படுத்தி சாராயம் காய்ச்சுகின்றனர். இதுபோன்ற மோசமான கள்ளச்சாராயத்தை குடித்து ஏராளமானோர் பலியாகி உள்ளனர். பலருக்கு கண் பார்வையும் பறிபோயுள்ளது.

இதனால் கள்ளச்சாராயத்தை ஒழிக்க பல மாநில அரசாங்கங்களும், காவல்துறையும் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அந்த வகையில், மத்திய பிரதேசத்தில் சில கிராமங்களில் கள்ளச்சாராய விற்பனை அமோகமாக நடைபெறுவதாக போலீஸாருக்கு அண்மையில் தகவல் கிடைத்தது. இதன்பேரில், போலீஸார் குனா மாவட்டத்தில் உள்ள சான்சோடா மற்றும் ரகோகர் கிராமங்களில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது.
அப்போது அந்த கிராமங்களில் உள்ள அனைத்து இடங்களிலும் போலீஸார் சோதனை நடத்தினர். ஆனால் எங்கும் கள்ளச்சாராய பீப்பாய்களையோ அல்லது பானைகளையோ போலீஸாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர் அங்கிருந்த ஒரு அடிபம்பை தண்ணீர் குடித்த போலீஸார், அதிர்ச்சியில் உறைந்தனர். ஏனெனில், அந்த அடிபம்பில் இருந்து தண்ணீர் வரவில்லை. சாராயம் வந்திருக்கிறது.
இதையடுத்து, அந்த அடிபம்பை எடுத்து பூமியை தோண்டி பார்த்த போது, சுமார் 7 அடி ஆழத்தில் பெரிய அளவிலான ராட்சத டேங்குகளில் கள்ளச்சாராயம் நிரப்பி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, அந்த டேங்குகளை வெளியே எடுத்த போலீஸார், அதிலிருந்த கள்ளச்சாராயத்தை கீழே கொட்டினர். விசாரணையில், கள்ளச்சாராய கும்பல் இந்த அடிபம்பில் சாராயத்தை எடுத்து பாலித்தீன் கவரில் வைத்து விற்பனை செய்து வருவது தெரியவந்தது. இதன் தொடர்ச்சியாக, அந்த கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.
-
Kerala: ஒன்றரை வயது குழந்தையின் உடலில் 91 காயங்கள்! 7 எலும்பு முறிவுகள்! துடிதுடித்த திருவனந்தபுரம்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது












Click it and Unblock the Notifications