காதலியின் சடலத்துடன் நண்பனுடன் சேர்ந்து உடலுறவு கொண்ட நபர் கைது

Subscribe to Oneindia Tamil

டெல்லி: காதலியை கொலை செய்து நண்பனுடன் சேர்ந்து உடலுறவு கொண்ட நபரை டெல்லி போலீசார் கைது செய்தனர்.

ஒரேவீட்டில் வசிப்பு

ஒரேவீட்டில் வசிப்பு

தென்மேற்கு டெல்லியின் பிந்தாப்பூர் பகுதியிவ் வசிப்பவர் குல்பாம். வாடகை வீட்டில் வசிக்கும் இவருக்கு 18 வயதில் ஒரு காதலி இருந்தார். அவரையும் அழைத்துக் கொண்டு வந்து அந்த வீட்டில் திருமணம் செய்யாமலேயே ஒன்றாக (லிவ்-இன்) வசித்து வந்தார்.

திடீர் துர்நாற்றம்

திடீர் துர்நாற்றம்

இந்த நிலையில் மே மாதம் 2ம்தேதி, குல்பாம் வீட்டுக்கு அருகில் வசிக்கும் ஒரு நபரிடமிருந்து போலீசாருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் தங்களது பக்கத்து வீட்டில் இருந்து கடுமையான துர்நாற்றம் வீசுவதாக புகார் தெரிவிக்கப்பட்டது.

அலமாரியில் பிணம்

அலமாரியில் பிணம்

இதையடுத்து போலீசார் சந்தேகத்தின்பேரில் குல்பாம் வீட்டுக்குள் சென்று துர்நாற்றம் வந்த இடத்தை தேடினர். அலமாரியில் இருந்துதான் அந்த துர்நாற்றம் வருவது தெரியவந்தது. இதையடுத்து அலமாரியை போலீசார் திறந்து பார்த்தபோது அங்கு உடல் சிதைந்த நிலையில் இளம் பெண் சடலம் இருந்ததை பார்த்தனர்.

காதலன் கைது

காதலன் கைது

அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள், அந்த பெண் குல்பாமுடன் சேர்ந்து வசித்தவர் என்பதை அடையாளம் காட்டினர். இதையடுத்து குல்பாமிடம் விசாரணை நடத்திய போலீசார் அவரது முன்னுக்குபின் முரணான பதிலால் சந்தேகமடைந்து கைது செய்தனர்.

ஒப்புதல் வாக்குமூலம்

ஒப்புதல் வாக்குமூலம்

காவல் நிலையத்தில் அவரிடம் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தியபோது அப்பெண்ணை கொலை செய்து அலமாரியில் வைத்திருந்ததை குல்பாம் ஒப்புக்கொண்டார். விாசரணையில் பல திடுக்கிடும் உண்மைகளை அவர் தெரிவித்தார்.

கள்ளக்காதல்

கள்ளக்காதல்

வாக்குமூலத்தில் குல்பாம் கூறியதாவது: நானும் அந்த பெண்ணும் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்துவந்தோம். இந்நிலையில் பக்கத்து வீட்டுக்காரருடன் எனது காதலிக்கு நெருக்கமான பழக்கம் ஏற்பட்டது. எங்களது உறவு தெரிந்திருந்தும் பக்கத்து வீட்டுக்காரரும் எனது காதலியை திருமணம் செய்ய ஒப்புக்கொண்டுள்ளார். இவர்களது நெருக்கம் எனக்கும் தெரியவந்தது.

நண்பன் ஆசைக்கு இணங்க மறுப்பு

நண்பன் ஆசைக்கு இணங்க மறுப்பு

இதைப்பற்றி எனது நண்பன் முகமது ரஃபீக்கிடம் சொல்லி வருத்தப்பட்டேன். அவளை கொன்றால்தான் எனது மனம் ஆறும் என்று கூறி அழுதேன். எனவே எனது காதலியை கொலை செய்ய உதவுவதாக ரஃபீக் முன்வந்தான். இதையடுத்து ஏப்ரல் 29ம்தேதி எனது வீட்டுக்கு வந்த ரஃபீக் எனது காதலியை பாலியல் உறவு கொள்ள முயன்றான். அதற்கு அவள் சம்மதிக்காமல் முரண்டுபிடித்ததால் இருவரும் சேர்ந்து கழுத்தை நெறித்துக் கொலை செய்தோம்.

சடலத்தையும் விடவில்லை

சடலத்தையும் விடவில்லை

இதன்பிறகும் ஆசை தீராமல் கொலை செய்யப்பட்ட உடலுடன் ரஃபீக் உடலுறவு கொண்டான். நானும் அப்படியே செய்தேன். இருவருமாக சேர்ந்து தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் சடலத்துடன் உடலுறவு கொண்டோம். உடலில் இருந்து துர்நாற்றம் அதிகமாக வந்ததால் மாட்டிக்கொண்டோம் என்று வாக்குமூலத்தில் கூறியுள்ளார். பக்கத்து வீட்டுக்காரருடன் பழக்கம் ஏற்பட்டதால் கொலை செய்ய குல்பாம் தீர்மானித்தாரா, அல்லது நண்பனுடன் உடலுறவு கொள்ள மறுத்ததால் காதலியை கொலை செய்துவிட்டு பக்கத்து வீட்டுக்காரருடன் பழக்கம் ஏற்பட்டதால் கொலை செய்ததாக நடிக்கிறாரா என்பது குறித்த கோணத்திலும் காவல் துறையினர் விசாரித்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+