Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருமண வயது முக்கியமில்லை.. 18 வயதை கடந்தாலே லிவ்–இன் உறவில் இருக்கலாம் – ராஜஸ்தான் உயர் நீதிமன்றம்

Subscribe to Oneindia Tamil

ஜெய்பூர்: காதல் திருமணங்கள் அதிகரிக்கும் அதே நேரத்தில் காதலுக்கு மறுப்பு தெரிவிக்கும் செயல்களும் நம் சமூகத்தில் அதிகளவு உள்ளது. சாதிய ஆணவ கொலைகள் நடக்காத மாநிலங்களே இல்லை என்று கூறலாம். இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் காதல் ஜோடி இணைந்து வாழ குடும்பத்தினர் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுதொடர்பான வழக்கில், திருமணத்திற்கான சட்டப்பூர்வ வயதை எட்டாவிட்டாலும் ஒருவர் 18 வயதை கடந்துவிட்டாலே திருமணம் செய்யாமல் லிவ் - இன் உறவில் வாழ உரிமை உண்டு என்று ராஜஸ்தான் மாநில உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 18 வயது பெண், 19 வயது இளைஞர் காதலித்து வந்துள்ளனர். ஆனால் அவர்களின் காதலுக்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தொடர்ந்து தங்களின் குடும்பத்தினர் தங்களை இணைந்து வாழ தடுப்பதாக அந்த காதல் ஜோடி ராஜஸ்தான் மாநில உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த மனுவில், "நாங்கள் கடந்த சில வருடங்களாக காதலித்து வருகிறோம்.

adults-can-be-live-in-relationship-without-marraige-age-said-rajasthan-high-court

காதல் ஜோடி லிவ் - இன்

கடந்த 2025 அக்டோபர் 27 ஆம் தேதி முதல் லிவ் - இன் உறவில் இருப்பதற்காக ஒரு ஒப்பந்தம் போட்டோம். சுயமாக வாழ விரும்பி இந்த முடிவை எடுத்தோம். பெண்ணின் குடும்பத்தினர் இதை கடுமையாக எதிர்த்தனர். எங்களுக்கு மிரட்டல் கொடுத்து தாக்கவும் செய்தனர். இதனால் நாங்கள் மிகுந்த அச்சமடைந்தோம். இதுதொடர்பாக எங்களுக்கு பாதுகாப்பு கேட்டு உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தோம். ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால் எங்களுக்கு பாதுகாப்பு வேண்டும்." என்று கோரியிருந்தனர்.

இந்த வழக்கை நீதிபதி அனூப் தாண்டே விசாரணை செய்தார். அப்போது எதிர்தரப்பில், "அந்த இளைஞருக்கு திருமண வயதான 21 ஆகவில்லை. எனவே அவர்கள் சட்டப்படி லிவ் - இன் உறவு முறையில் இருக்க முடியாது." என்று வாதிட்டனர். இதற்கு நீதிபதி, "திருமண வயதை எட்டவில்லை என்பதற்காக அவர்களின் உரிமையை மறுக்க முடியாது. அரசியலமைப்புப் பிரிவு 21 இன் படி அவர்களின் தனிப்பட்ட சுதந்திரத்தை யாரும் மறுக்க முடியாது.

லிவ் - இன் தனிப்பட்ட உரிமை

18 வயதிற்கு மேற்பட்டவர்களின் தனிப்பட்ட சுதந்திரம் மற்றும் உரிமையை இந்திய அரசியலமைப்பு சட்டம் அங்கீகரிக்கிறது. எனவே 18 வயதை கடந்தவர்கள் லிவ் - இன் உறவில் இருப்பது அவர்களின் தனிப்பட்ட உரிமை. இந்திய அரசியலமைப்பு சட்டப்படி லிவ் - இன் உறவு தடை செய்யப்படவில்லை. அது குற்றமும் கிடையாது. உரிமை மறுக்கப்பட்டு அச்சுறுத்தப்படுவோர் பாதுகாப்பு கேட்டு நீதிமன்றம் வரலாம்.

ஆனால் காதல் ஜோடி இருவரும் 18 வயதை கடந்தவர்களாக இருக்க வேண்டும். வழக்கு தொடர்ந்துள்ள காதல் ஜோடியின் புகார் குறித்து மாவட்ட காவல்துறை விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பது உறுதி செய்யப்பட்டால் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். அவர்களின் திருமண வயதை கணக்கிட்டு, தனிப்பட்ட உரிமையை மறுக்க கூடாது." என்று தீர்ப்பளித்துள்ளார். இந்தத் தீர்ப்பு சமூகவலைதளங்களில் பேசு பொருளாகியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+