For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"அதுக்கு" லிவ் இன் ரிலேஷன்ஷிப்தான் காரணம்.. நாட்டுக்கே சாபம்.. ம.பி உயர்நீதிமன்றம் பரபரப்பு கருத்து!

Google Oneindia Tamil News

இந்தூர்: திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழும் Live In Relationship என்பது ஒரு சாபம். இது பாலியல் குற்றங்கள் அதிகரிக்க வழிவகுக்கிறது என மத்திய பிரதேச உயர்நீதிமன்றம் வருத்தம் தெரிவித்தது.

மத்திய பிரதேசத்தை சேர்ந்தவர் 25 வயது வாலிபர். இவர் இளம்பெண் ஒருவருடன் திருமணம் செய்து கொள்ளாமல் ‛Live In Relationship' முறையில் வாழ்ந்தார்.

மேலும் அந்த பெண்ணுக்கு கருக்கலைப்பு செய்துள்ளார். இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த பெண்ணுக்கு இன்னொரு நபருடன் திருமண நிச்சயத்தார்த்தம் நடந்தது.

ஆந்திர பிரதேச மருந்து உற்பத்தி ஆலையில் தீ விபத்து.. 6 பேர் பரிதாப பலி.. 12 பேர் படுகாயம்! ஆந்திர பிரதேச மருந்து உற்பத்தி ஆலையில் தீ விபத்து.. 6 பேர் பரிதாப பலி.. 12 பேர் படுகாயம்!

மிரட்டல்

மிரட்டல்

இதனை 25 வயது வாலிபரால் பொறுத்து கொள்ள முடியவில்லை. இதனால் அவர் இளம்பெண்ணுக்கு தொல்லை கொடுத்துள்ளார். மேலும் இருவரும் லிவ் இன் ரிலேஷன்ஷிப் உறவில் இருந்தது குறித்து மற்றவர்களிடம் தெரிவிப்பதாக கூறி மிரட்டல் விடுத்துள்ளார். இதுதவிர சம்பவம் குறித்து அந்த பெண்ணின் வருங்கால மாமனார், மாமியாரிடம் தெரிவித்து இளம்பெண்ணுக்கு திருமணம் நடந்தால் தற்கொலை செய்து கொள்வதாக கூறி மிரட்டியுள்ளார்.

வாலிபர் மீது வழக்கு

வாலிபர் மீது வழக்கு

இதனால் திருமணம் தடைப்பட்டது. அந்த பெண் பெரும் மன உளைச்சலுக்கு ஆளானார். இந்நிலையில் தான் இளம்பெண் சார்பில் 25 வயது வாலிபர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டது. மிரட்டில் பலாத்காரம், 2 முறை கட்டாய கருக்கலைப்பு என்பன உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டு இருந்தன. இதையடுத்து வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

முன்ஜாமீன் மனு தள்ளுபடி

முன்ஜாமீன் மனு தள்ளுபடி

இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி அந்த வாலிபர் சார்பில் மத்திய பிரதேச மாநில உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதி சுபோத் அபயங்கர் விசாரித்தார். அப்போது அவர் வாலிபருக்கு முன்ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தார். மேலும், லிவ் இன் ரிலேஷன்சிப் குறித்து அவர் வருத்தத்துடன் சில கருத்துகளை பதிவு செய்தார். அவர் கூறியதாவது:

சாபக்கேடு

சாபக்கேடு

"சமீப காலமாக Live In Relationship முறையால் அதிகரித்து வரும் பாலியல் குற்றங்களை பார்க்கும்போது அது ஒரு சாபக்கேடு என்பதை கவனிக்க வேண்டிய கட்டாயத்தில் நீதிமன்றம் உள்ளது. அரசியலமைப்பின் 21வது பிரிவின் கீழ் Live In Relationship முறை வருகிறது. இது இந்திய சமூகத்தின் நெறிமுறைகளை சிதைக்கிறது.

பாலியல் குற்றம் அதிகரிப்பு

பாலியல் குற்றம் அதிகரிப்பு

அரசியலமைப்பு பிரிவு 21 வாழ்வதற்கான உரிமை மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது. ஆனால் இந்த உறவு முறை பாலியல் குற்றங்களை அதிகரிக்க செய்கிறது. அத்துடன் தீவிர பாலியல் குற்றங்களுடன் காம நடத்தையை ஊக்குவிக்கும் வகையில் உள்ளது. இதை இந்த வழக்கில் இருந்து புரிந்து கொள்ள முடிகிறது. ஏனென்றால் பாதிக்கப்பட்ட பெண் 2 முறை கட்டாய கருக்கலைப்புக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்'' என வருத்தமாக கூறினார்.

English summary
The Madhya Pradesh High Court while hearing a case related to sexual harassment, has made a strong comment on the live-in relationship. The court termed “live-in” relationships as a curse in view of the rise in sexual offenses and social malpractices.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X