திக்விஜய்சிங் தோற்றால் ஜீவசமாதி என அறிவித்த ‘அகோரிபாபா’ மாயம்.. ம.பி.யில் பரபரப்பு
Recommended Video
போபால்: லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய்சிங் தோல்வி அடைந்தால் தாம் உயிருடன் ஜீவசமாதி அடைவேன் என பிரகடனம் செய்த அகோரிபாபா பைரக்யானந்த் திடீரென மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மத்தியபிரதேச மாநிலம் போபால் லோக்சபா தொகுதியில் திக்விஜய்சிங் போட்டியிட்டார். அவரை எதிர்த்து மாலேகான் குண்டுவெடிப்பில் சிறைவாசம் அனுபவித்த சாத்வி பிரக்யாசிங்கை பாஜக வேட்பாளராக நிறுத்தியது.

ஆனால் ராமர் கோவிலை கட்டாததால் அதிருப்தி அடைந்த அகோரி பாபாக்கள் உள்ளிட்ட 7,000 சாமியார்கள் திக்விஜய்சிங்கை ஆதரித்தனர். திக்விஜய்சிங் வெல்ல வேண்டும் என்பதற்காக யாகங்களை நடத்தினர்.
இதில் கம்ப்யூட்டர் பாபா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் பஞ்சயதி நிரஞ்சனி அகாடாவை சேர்ந்த மகாமண்டலேஸ்வரர் சுவாமி பைரக்யானந்த் என்பவர், திக்விஜய்சிங் தோல்வி அடைந்தால் தாம் ஜீவசமாதி அடைவேன் என அறிவித்தார்.
மேலும் திக்விஜய்சிங் வெல்வதற்காக நாள்தோறும் 5 கிலோ காய்ந்த மிளகாயை நெருப்பில் போட்டு யாகமும் வளர்த்து வந்தார். இந்நிலையில் லோக்சபா தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பிரக்யாசிங்கிடம் 3.64 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் திக்விஜய்சிங் தோல்வி அடைந்தார்.
இதனைத் தொடர்ந்து ஜீவசமாதி அடைவதாக அறிவித்த பைரக்யானந்த் தலைமறைவாகிவிட்டார். அவர் உயிருடன் இருக்கிறாரா? இல்லை ஜீவசமாதி அடைந்துவிட்டாரா? என மத்திய பிரதேசத்தில் பரபரப்பு நிலவுகிறது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications