For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Breaking Live: ராஜ்யசபா துணைத் தலைவர் தேர்தல்: பாஜக கூட்டணி வேட்பாளர் ஹர்வன்ஷ் நாராயண் வெற்றி

Google Oneindia Tamil News

டெல்லி: ராஜ்யசபா துணைத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளர் ஹர்வன்ஷ் நாராயண் சிங் வெற்றி பெற்றார்

இத்தேர்தலில் ஐக்கிய ஜனதாதளம் கட்சியைச் சேர்ந்த ஹர்வன்ஷ் நாராயண் சிங்கும், காங்கிரஸ் கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் பி.கே.ஹரிபிரசாத்தும் போட்டியிட்டனர்.

ஆளுங்கூட்டணி வேட்பாளரே வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படியே நாராயண் சிங் வெற்றி பெற்றுள்ளார்.

Live Updates: Rajya Sabha Dy Chairman poll today

Newest First Oldest First
11:45 AM, 9 Aug

120 வாக்குகள் பெற்ற ஹர்வன்ஷ் நாராயண் சிங் வெற்றி பெற்றார்

காங். வேட்பாளர் ஹரிபிரசாத்துக்கு 105 வாக்குகள் கிடைத்தன

வெற்றி பெற்ற ஹர்வன்ஷ் நாராயண் சிங் பிகாரைச் சேர்ந்தவர்

11:44 AM, 9 Aug

ராஜ்யசபா துணைத் தலைவர் தேர்தல்: பாஜக கூட்டணி வேட்பாளர் ஹர்வன்ஷ் நாராயண் சிங் வெற்றி
9:44 AM, 9 Aug

மாநிலங்களவை துணைத் தலைவர் பி.ஜே.குரியனின் பதவிக் காலம் முடிந்ததை அடுத்து தேர்தல்
8:51 AM, 9 Aug

ஹரிபிரசாத்துக்கு பகுஜன் சமாஜ், தேசியவாத காங்கிரஸ், ஆர்ஜேடி, சமாஜ்வாடி ஆதரவு உள்ளது

தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 120 பேரின் ஆதரவு உள்ளதாக தெரிகிறது.

எதிர்க்கட்சிகளுக்கு 118 பேர் உள்ளதாக நம்பப்படுகிறது

வெற்றிக்குத் தேவையான எண்ணிக்கை 123

8:51 AM, 9 Aug

முற்பகல் 11 மணிக்கு வாக்குப் பதிவு நடைபெறும்

வாக்குப் பதிவு முடிந்ததும் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும்

பாஜக வேட்பாளருக்கு சிவசேனா, அகாலிதளம், ஆர்சிபி ஆகியவை ஆதரவு தெரிவித்துள்ளன

அதிமுக எம்.பிக்களும் பாஜகவுக்கே வாக்காளிப்பாளர்கள் என நம்பப்படுகிறது

8:51 AM, 9 Aug

தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று முடிவடைந்தது

தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் ஹர்வன்ஷ் நாராயண் சிங் போட்டியிடுகிறார்

காங்கிரஸ் கூட்டணி சார்பில் பி.கே.ஹரிபிரசாத் நிறுத்தப்பட்டுள்ளார்

English summary
Live page on Rajya Sabha deputy chairman poll.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X