20 ரூபாய் கொடுத்தால் போதும் பதன்கோட் விமானப் படை தளத்தில் ஆடு மேய்க்கலாம் !
டெல்லி: தீவிரவாத தாக்குதலுக்கு உள்ளான பதன்கோட் விமானப் படை தளத்தை சுற்றியுள்ள உள்ளூர் மக்கள் 20 ரூபாய் கொடுத்து தங்களது ஆடுகளை மேய்த்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது.
பஞ்சாப் மாநிலம் பதன்கோட் விமானப் படை தளத்தில் கடந்த 2 ஆம் தேதி நுழைந்த தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர்கள் 7 பேர் வீரமரணம் அடந்தனர். இந்த தாக்குதலில் ஈடுபட்ட 6 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர். இதையடுத்து பதன்கோட் பகுதியில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.

இந்நிலையில் விமானப்படை வளாகத்திற்குள், அப்பகுதியைச் சுற்றி வசிக்கும் பொதுமக்கள் தங்கள் ஆடு, மாடுகளை மேய்க்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு செல்லும் சிலர், பாதுகாப்பு பணியில் ஈடுபடும் வீரர்களுக்கு சுமார் 20 ரூபாய் வரை பணம் கொடுத்துவிட்டு சென்றுள்ளது தெரியவந்துள்ளது.
ஒதுக்குப்புறங்களில் உள்ள சில வாயில்களில் பணியாற்றும் பாதுகாப்பு படையினருக்கு பணம் கொடுத்துவிட்டு, உள்ளே சென்று கால்நடைகளை மேய விடுவது பொதுவான நடைமுறை என்று உளவுத்துறை நிறுவனங்கள் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளது.
மேலும், பதான்கோட் விமான தளத்தில் உள்ள 'கேன்டீன்' மற்றும் கடைகளில் வெளிநபர்கள் தாராளமாக சென்று பொருள்களை வாங்கி வந்திருப்பதும் தெரியவந்துள்ளது. சிலர் சொந்தமாக அடையாள அட்டையே வைத்திருப்பதும், சிலர் பாதுகாப்பு அலுவலர்களுக்கு லஞ்சம் அளித்து உள்ள சென்றிருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.
விமானப்படை தளத்தை சுற்றியுள்ள பகுதிகளில் நூற்றுக்கணக்கான குஜ்ஜார் இன மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் கால்நடைகளை வளர்த்து வருகின்றனர். இந்த கால்நடைகளுக்கு ஏற்ற புற்கள் விமனப்படை வளாகத்திற்குள் வளர்ந்திருப்பதால் மேய்ச்சலுக்கு அனுமதிக்கப்படுகிறது.
விமானப்படை தளத்தின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில், அப்பகுதியைச் சுற்றியுள்ள மக்களை கணக்கெடுக்கும் நடவடிக்கையை பஞ்சாப் அரசு தொடங்கியுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications