40 வயது பெண்.. 3 இளைஞர்கள்.. பள்ளி வளாகத்தில் வெறியாட்டம்.. ஊருக்கு நடந்தே போனபோது.. ராஜஸ்தான் ஷாக்
40 வயது பெண்ணை பலாத்காரம் செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்
ஜெய்ப்பூர்: 40 வயது பெண்ணை 3 இளைஞர்கள் சேர்ந்து பள்ளி வளாகத்திலேயே கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர்.. சம்பந்தப்பட்ட 3 பேருமே 20 வயதுக்குட்பட்டவர்கள்.. லாக்டவுனால் சொந்த ஊருக்கு அந்த பெண் நடந்து சென்றபோது இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது!!
லாக்டவுன் அறிவிக்கப்பட்டதில் இருந்தே மக்கள் சில அவதிகளுக்கு உள்ளாகி வருகின்றனர்.. போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. அதனால் எப்படியாவது சொந்த ஊருக்கு சென்றுவிடலாம் என்று புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நடையாய் நடந்து சென்று கொண்டுள்ளனர்.
அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலத்தில் 40 வயது பெண் ஒருவர் ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.. பெண் ஒருவர் சாலையில் வருவதை கண்ட போலீசார் விசாரித்தனர்.. அதற்கு அந்த பெண், தான் ஒரு கூலி தொழிலாளி, என்றும், சாப்பிட உணவும், தங்குமிடம் இல்லாததால் சொந்த ஊருக்கு நடந்து போய் கொண்டிருப்பதாகவும் சொன்னார்.

அனுமதி
இருந்தாலும் துணைக்கு யாருமே இல்லாமல் தனியாக அந்த பெண்ணை ஊருக்கு அனுப்புவது பாதுகாப்பானது இல்லை என்று போலீசார் உணர்ந்தனர்.. அதனால் அந்த பெண்ணை மேற்கொண்டு செல்ல அனுமதிக்காமல், வேறு எங்காவது பாதுகாப்பாக தங்க வைக்கலாம் என நினைத்தனர்.. ஆனால், அந்த பகுதியில் அரசு நடத்தும் காப்பகங்களோ, மையங்களோ இல்லை. போலீஸ் ஸ்டேஷனிலும் பெண்ணை தங்க வைக்க முடியாது.

அரசு பள்ளி
அதனால், பக்கத்தில் இருந்த சவாய் மாதோபூர் என்ற கிராமத்தில் தங்க அந்த ஊர் மக்களின் உதவியையும் கேட்டனர். அவர்களோ கிராமத்தில் எங்கும் தங்க வைக்க காலியான இடம் இல்லை என்று சொல்லி அரசு பள்ளியில் தங்க வைத்து கொள்ளுமாறு சொன்னார்கள். அதன்படி, அந்த பெண்ணும் பள்ளியில் தங்கி உள்ளார்.. இந்நிலையில் அந்த கிராமத்தை சேர்ந்த லகான் ரீகர், ரிஷிகேஷ் மீனா, கமல் கர்வார் என்ற 3 இளைஞர்கள் அவரை மிக கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

6 நாட்கள்
அந்த பெண் அங்கிருந்து தப்பி, போலீசில் புகார் செய்யவும், அந்த 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதை பற்றி போலீசார் சொல்லும்போது, "பாதிக்கப்பட்ட பெண் 6 நாட்களாக நடந்து வந்திருக்கிறார்.. அதற்கு பிறகுதான் சவாய் மாதோபூர் கிராமத்தில் ஊர் மக்கள் அனுமதியுடன் தங்க வைத்தோம்.. சில நாட்களாக அவர் அங்குதான் தங்கினார்.. அந்த சமயத்தில்தான் கிராமத்தை சேர்ந்த 3 இளைஞர்கள் பள்ளி வளாகத்திலேயே பலாத்காரம் செய்துள்ளனர். அந்த பெண் எவ்வளவோ கத்தி கூச்சலிட்டும் யாரும் அவரை காப்பாற்ற வரவில்லை என்று புகார் அளிக்கும்போது சொல்லி உள்ளார்.

பலாத்காரம்
பலாத்காரம் செய்த 3 பேரையும் கைது செய்துவிட்டோம்.. அவர்கள் 3 பேருமே 20 வயதுக்குட்பட்டவர்கள்.. குற்றத்தை ஒப்புக் கொண்டதால், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளோம்.. அந்த பெண்ணை மீட்டு மருத்துவ பரிசோதனைக்காக அனுமதித்துள்ளோம்.. அவரது ரத்த மாதிரிகள் சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவருக்கு கொரோனா தொற்று இருக்கிறதா என தெரியவில்லை... மேலும் அவர் யாருடன் தொடர்பில் இருந்தார் என்ற விவரங்களையும் சேகரித்து வருகிறோம்" என்றனர். ஊரடங்கு என்று கால்நடையாக நடந்து வந்த பெண்ணுக்கு நடந்த இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications