கேரளாவில் தமிழர்களுக்கு மிரட்டல்- வயநாடு வனப் பகுதியில் 'மாவோயிஸ்டுகள்’ வேட்டையில் தண்டர்போல்ட் படை!
வயநாடு: கேரளா மாநிலம் வயநாடு லோக்சபா தொகுதியில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களாக பணிபுரியும் தமிழர்கள் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் என மிரட்டல் விடுத்த மாவோயிஸ்டுகளை அழித்தொழிக்க தண்டர்போல்ட் எனும் சிறப்பு அதிரடிப்படை களமிறங்கி உள்ளது.
கேரளாவில் மொத்தம் 20 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இத்தொகுதிகள் அனைத்துக்கும் ஒரே கட்டமாக நாளை மறுநாள் ஏப்ரல் 26-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. அன்றைய தினம் கேரளாவின் 20 தொகுதிகள் உட்பட நாடு முழுவதும் 89 லோக்சபா தொகுதிகளில் 2-வது கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

இந்த நிலையில் கேரளாவில் லோக்சபா தேர்தலை சீர்குலைக்கும் வகையில் மாவோயிஸ்டுகள் வனப் பகுதிகளை விட்டு வெளியே வந்துள்ளனர். தமிழ்நாடு எல்லைப் பகுதியில் தேயிலைத் தோட்டங்களில் பணிபுரியும் இலங்கையை சேர்ந்த மலையகத் தமிழர்களிடம் இன்று அதிகாலை தங்களது மிரட்டலை விடுத்துள்ளனர். லோக்சபா தேர்தலில் வாக்களிக்க கூடாது; கம்பமலைப் பகுதிக்கு வாக்குச் செல்வதை தவிர்க்க வேண்டும் என மாவோயிஸ்டுகள் மிரட்டி இருக்கின்றனர். துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் மாவோயிஸ்டுகள் மிரட்டுகிற வீடியோ பதிவுகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டும் வருகின்றன.
இந்த வீடியோ பதிவுகள் கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன. மொத்தம் 4 மாவோயிஸ்டுகள், தேர்தலுக்கு எதிராக மிரட்டல் விடுத்திருந்தனர். தற்போது தமிழர்களை மிரட்டிய மாவோயிஸ்டுகள் யார் யார் என அடையாளம் காணப்பட்டுள்ளது. மொய்தீன், சோமன், சந்தோஷ் மற்றும் ஆசிக் ஆகிய 4 மாவோயிஸ்டு தீவிரவாதிகளே வாக்களிக்கக் கூடாது என மிரட்டி இருக்கின்றனர். இவர்களில் சோமன் என்ற அக்பர், வயநாடு கல்பேட்டா பகுதியை சேர்ந்த முன்னாள் பத்திரிகையாளர்.
இதனையடுத்து வயநாடு வனப்பகுதிகளில் மாவோயிஸ்டுகளை அழித்தொழிக்கும் தண்டர்போல்ட் எனும் சிறப்பு அதிரடிப்படை போலீசார் களமிறங்கி உள்ளனர். அடையாளம் காணப்பட்ட மாவோயிஸ்டுகளை சுட்டு வீழ்த்த தீவிர தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சத்தீஸ்கரில் அண்மையில் 29 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். சத்தீஸ்கரில் லோக்சபா தேர்தலை சீர்குலைக்க முயன்றதால் 29 மாவோயிஸ்டுகள் அழித்தொழிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications