லோக்சபா தேர்தல்: மே.வங்கத்தில் அதிகபட்சம் 2 சீட்தான்.. என்ன ஓகேவா? காங்கிரஸை ரொம்பவே கதறவிடும் மமதா!
கொல்கத்தா: லோக்சபா தேர்தலில் மேற்கு வங்க மாநிலத்தில் அதிகபட்சமாக 2 சீட்தான் காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்படும். அடுத்த 10 நாட்களுக்குள் இந்த தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை முடித்துக் கொள்ள வேண்டும் என காங்கிரஸுக்கு திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மமதா பானர்ஜி கெடு விதித்துள்ளார்.
லோக்சபா தேர்தலில் பாஜகவுக்கு எதிராக 28 எதிர்க்கட்சிகளை உள்ளடக்கிய மெகா கூட்டணியாக இந்தியா கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியா கூட்டணி சார்பாக 4 ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்றன.

டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் காரசார விவாதங்கள் நடைபெற்றன. இந்தக் கூட்டத்தில் பேசிய மமதா பானர்ஜி, காங்கிரஸ் கட்சி நாடு முழுவதும் 300க்கும் மேற்பட்ட இடங்களில் கூட போட்டியிடலாம். ஆனால் மாநிலங்களில் மாநில கட்சிகள்தான் இந்தியா கூட்டணிக்கு தலைமை வகிக்கும். மாநில கட்சிகள் கொடுக்கும் இடங்களை காங்கிரஸ் வாங்கிக் கொண்டு அமைதியாக இருக்க வேண்டும். மேற்கு வங்கம் என்றால் திரிணாமுல் காங்கிரஸ்தான் கூட்டணிக்கு தலைமை; உ.பி.யில் என்றால் சமாஜ்வாதி கட்சிதான் தலைமை என்கிற புரிதல் காங்கிரஸுக்கு வர வேண்டும் என்றார்.
அத்துடன் லோக்சபா தேர்தலுக்கு அதிக நாட்கள் இல்லை; ஆகையால் டிசம்பர் 31-ந் தேதிக்குள் முக்கிய மாநிலங்களில் தொகுதி பங்கீட்டை உடனே முடித்துவிட வேண்டும் எனவும் மமதா பானர்ஜி பொரிந்து தள்ளிவிட்டார். காங்கிரஸ் கட்சியோ வாய் பேச முடியாத நிலையில் ஜனவரி 2-வது வாரத்துக்குள் அனைத்து பேச்சுவார்த்தைகளையும் முடித்துவிடலாம் என கூறியிருக்கிறது.
இந்த நிலையில்தான் மேற்கு வங்கத்தில் லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு மிக மிகாதிகபட்சமாக 2 தொகுதிகளைத்தான் தர முடியும். இதனை காங்கிரஸ் வாங்கிக் கொள்ள வேண்டும் என அதிரடி காட்டி இருக்கிறார் மமதா பானர்ஜி. ஆனால் காங்கிரஸ் கட்சியோ 6 முதல் 8 தொகுதிகளை எதிர்பார்ப்பதாக பதில் தந்துள்ளது. அதெல்லாம் முடியவே முடியாது.. 2 சீட்டை வாங்கிக் கொண்டு போட்டியிட்டு ஜெயிக்க முடியுமான்னு வழியை பாருங்க என கறார் காட்டிவிட்டாராம் மமதா பானர்ஜி.
இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள இடதுசாரிகளோ மேற்கு வங்கத்தில் ஒரு போதும் திரிணாமுல் காங்கிரஸுடன் இணைந்து தேர்தலை சந்திக்கவே முடியாது என கூறி வருகின்றனர். இதனால் பேசாமல் இடதுசாரிகளுடன் இணைந்து 10 தொகுதிகளில் போட்டியிடலாமா எனவும் காங்கிரஸ் ஆலோசிக்கிறதாம். இதனால் லோக்சபா தேர்தலில் மேற்கு வங்கத்தில் "இந்தியா" கூட்டணி இருக்குமா? உடையுமா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications