For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஏப்ரலில் நாடாளுமன்றத் தேர்தல்?

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: நாடாளுமன்றத் தேர்தலை ஏப்ரல் மாதம் பிற்பாதியில் தொடங்கி மே மாதம் வரை 5 கட்டங்களாக நடத்த தேர்தல் ஆணையம் ஆயத்தமாகி வருவதாக தேர்தல் ஆணையத்தின் உயர் அதிகாரிகள் மட்டத்தில் கூறப்படுகிறது.

நாடே பெருமளவில் எதிர்பார்க்கும் நாடாளுமன்றத் தேர்தல் குறித்த அறிவிப்பு பிப்ரவரி இறுதி அல்லது மார்ச் முதல் வாரத்தில் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.

Lok Sabha elections to be held from mid-April

இந்த அறிவிப்பிற்கு முன்னர் 2014-15 இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யும் வகையில் ஒரு முறை மக்களவை கூடும். தவிர, ஊழலுக்கு எதிரான சட்ட மசோதாக்கள் சிலவற்றை தேர்தலுக்கு முன்னர் நிறைவேற்றும் வகையில் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் ஒன்று நடைபெறும் என கூறப்படுகிறது.

நடப்பு மக்களவையில் ஆயுள் காலம் ஜூன் 1-ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. நாடாளுமன்றத் தேர்தலோடு, ஆந்திரம், ஒடிசா, சிக்கிம் ஆகிய 3 மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தலும் நடத்தப்படும் என தெரிகிறது.

English summary
Bracing for the big exercise, the Election Commission is all set to hold Lok Sabha elections starting mid-April and spread it over at least five phases till early May. The much-awaited announcement for the polls is likely to be made by the end of February or early March, for which work has already begun, top Commission sources said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X