லோக்சபா தேர்தல் தேதி மார்ச் முதல் வாரத்தில் வெளியாகிறது
டெல்லி: லோக்சபா தேர்தல் தேதி மார்ச் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது. இதுபற்றி தேர்தல் ஆணையம் தீவிரமாக பரிசீலித்து வருகிறது.
தற்போது 15-வது நாடாளுமன்றம் செயல்பட்டு வருகிறது. இதன் பதவிக்காலம், வரும் ஜூன் 1-ந்தேதி முடிகிறது. புதிய 16-வது நாடாளுமன்றம் மே 31-ந்தேதிக்குள் அமைக்கப்படவேண்டும்.
இதற்கு ஏற்ற வகையில் புதிய லோக்சபா தேர்தலை நடத்துவதற்கான பூர்வாங்க வேலைகளில் தேர்தல் ஆணையம் முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறது.

80 கோடி வாக்காளர்கள்
அந்த வகையில் வாக்காளர்கள் பட்டியலில் அடுத்த மாத இறுதிக்குள் திருத்தங்கள் செய்து முடிக்க வேண்டும் என அனைத்து மாநில, யூனியன் பிரதேச தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் செய்து இறுதி செய்யும் பணி தற்போது முடுக்கி விடப்பட்டுள்ளது. வரும் தேர்தலில் மொத்தம் 80 கோடி வாக்காளர்கள் வாக்குரிமை பெற்றிருப்பார்கள்.

6 கட்ட தேர்தல்
இந்த தேர்தலை 5 அல்லது 6 கட்டங்களாக நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருகிறது. தேர்தல் அட்டவணை அடுத்த மாதத்தின் கடைசி நாட்கள் அல்லது மார்ச் மாதம் முதல் 3 நாட்களில் அறிவிக்கப்படலாம் என்கின்றன தேர்தல் ஆணைய வட்டாரங்கள்.

ஏப்ரல் 16 முதல் வாக்குப் பதிவு
முதல் கட்டத்தேர்தலுக்கு 6 வாரங்களுக்கு முன்பாக தேர்தல் அட்டவணை வெளியிடப்படும். ஏப்ரல் 16-ந்தேதி தொடங்கி மே 13-ந்தேதி வரை 5 அல்லது 6 கட்டங்களாக தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என தகவல்கள் கூறுகின்றன.

8 லட்சம் வாக்குச் சாவடி
இதேபோன்று வாக்குச்சாவடிகளும் இறுதி செய்யப்பட்டு வருகின்றன. மொத்தம் 8 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. வாக்காளர்கள், வாக்குப்பதிவு அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் வசதிக்கு ஏற்ற வகையில் சிற்சில வாக்குச்சாவடிகள் மட்டும் மாற்றி அமைக்கப்படுகின்றன.

12 லட்சம் மின்னணு எந்திரங்கள்
இந்த தேர்தலுக்கு 12 லட்சம் மின்னணு ஓட்டு எந்திரங்கள் தேவைப்படும் என கணக்கிடப்பட்டுள்ளது.

3 மாநில சட்டசபை தேர்தல்
லோக்சபா தேர்தலுடன் ஆந்திரா, ஒடிஷா, சிக்கிம் மாநில சட்டசபை தேர்தலும் சேர்த்து நடத்தப்பட வாய்ப்பு உள்ளது. ஆந்திர சட்டசபையின் பதவிக்காலம் ஜூன் 2-ந்தேதியும், ஒடிஷா சட்டசபையின் பதவிக்காலம் ஜூன் 7-ந்தேதியும், சிக்கிம் சட்டசபையின் பதவிக்காலம் மே 21-ந்தேதியும் முடிகிறது. இதனால் லோக்சபா தேர்தலுடனேயே இத்தேர்தலையும் நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டு வருகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications