மயக்க மருந்து கொடுத்து ஆபாச படம் எடுத்துவிட்டார்.. பெண் மீது லோக்சபா எம்.பி பரபர புகார்
டெல்லி: லோக்சபா எம்.பி.க்கு மயக்க மருந்து கொடுத்து ஆபாச வீடியோ எடுத்து ஐந்து கோடி ரூபாய் கேட்டு மிரட்டிய பெண்ணை டெல்லி போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
குஜராத்தை சேர்ந்த லோக்சபா எம்.பி. கே.சி. பட்டேல் எம்.பி. டெல்லி போலீசில் ஒரு பரபரப்பு புகாரை அளித்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: பெண் ஒருவர் உதவி கேட்டு என்னிடம் வந்தார். காசியாபாத்தில் உள்ள அவரது வீட்டுக்கு அழைத்து சென்றார். அங்கு அவர் அளித்த குளிர்பானத்தில் மயக்க மருந்தை கலந்து என்னை நினைவிழக்க செய்து விட்டார்.

நினைவு இழப்பு
நான் நினைவு திரும்பி எழுந்த போது இடையே என்ன நடந்தது என்று தெரியாது. ஆனால் என்னை வைத்து ஆபாச போட்டோக்கள், வீடியோக்களை எடுத்துள்ளதாக அந்த பெண்ணும் அவருடன் இருந்த சில ஆண்களும் என்னிடம் கூறினர்.

ரூ.5 கோடி மிரட்டல்
மேலும், இந்த வீடியோக்களை வெளியிடாமல் இருக்க வேண்டுமானால், 5 கோடி ரூபாய் கேட்டு மிரட்டினார். மேலும் போலீசில் பொய் புகார் அளிப்போம் என்றும் அவர்கள் மிரட்டினர், இவ்வாறு அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது.

முன்பு ஒருமுறை
இப்படி ஒரு புகார் வந்திருப்பதை டெல்லி சிறப்பு கமிஷனர் முகேஷ் மீனாவும் உறுதி செய்தார். போலீசார் எப்.ஐ.ஆர் பதிவு செய்து அந்த பெண்ணை தேடி வருகின்றனர். அப்பெண் கடந்த ஆண்டு இதேபோல், ஒரு எம்.பி. மீது போலீசில் பொய் புகார் அளிக்க முயன்றதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சந்தேகங்கள்
அதேநேரம், காசியாபாத்திலுள்ள அந்த பெண் வீட்டுக்கு உதவி செய்ய எதற்கு ஒரு எம்.பி நேரடியாக செல்ல வேண்டும், இதுகுறித்து யாாருக்கும் ஏன் தகவல் தெரிவிக்கவில்லை என்பது புரியாத புதிராக உள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications