ஓட்டுப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரித்தது தேர்தல் ஆணையம்
டெல்லி: நடைபெற உள்ள லோக்சபா தேர்தல் மற்றும் சில மாநிலங்களுக்கான சட்டசபை மற்றும் சட்டசபைத் தொகுதி இடைத் தேர்தலில் ஓட்டுப்பதிவு 2 மணி நேரம் அதிகரிப்பட்டு, காலை 7 முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
16வது லோக்சபா தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 7-ந்தேதி தொடங்கி 9 கட்டங்களாக நடைபெறுகிறது. அதன்படி, தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளுக்கும் ஓரே கட்டமாக ஏப்ரல் 24-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. ஏற்கனவே இதற்கான அறிவிப்பை தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டது.
அப்போது, நாடு முழுவதிலும் உள்ள 543 லோக்சபா தொகுதிகளிலும் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. தேர்தலுக்கான எல்லா ஏற்பாடுகளும் தயாராக உள்ள நிலையில் ஓட்டுப்பதிவை சுமூகமாகவும் அமைதியாகவும் நடத்தி முடிப்பதற்கான முன் ஏற்பாடுகளில் தலைமை தேர்தல் கமிஷன் ஈடுபட்டுள்ளது.
ஆனால், கடந்த தேர்தலைக் காட்டிலும் இத்தேர்தலில் 10 கோடி வாக்காளர்கள் அதிகம் என்பதால் அனைவரும் வாக்களிக்க ஏதுவாக ஓட்டுப்பதிவு நேரத்தை அதிகரிக்க ஆலோசனை நடத்தப்பட்டு வந்தது.
அதன்படி, தற்போது ஓட்டுப்பதிவு நேரத்தை அதிகரித்து தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

விழிப்புணர்வு...
சமீப காலமாக தேர்தல்களில் மக்கள் ஆர்வமுடன் வந்து வாக்களிப்பது அதிகரித்துள்ளது. வாக்களிப்பது பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே ஏற்பட்டிருப்பது தான், அதிக வாக்காளர்கள் வருகைக்கு காரணமாக கூறப்படுகிறது.

அதிகரித்த வாக்காளர் எண்ணிக்கை...
கடந்த பொதுத் தேர்தலில் 71 கோடியே 30 லட்சம் வாக்காளர்கள் பெயர் பட்டியலில் இருந்தது. ஆனால், இந்த தேர்தலில் வாக்காளர்கள் எண்ணிக்கை சுமார் 10 கோடி உயர்ந்து 81 கோடியே 40 லட்சமாக உள்ளது.

கோரிக்கைகள்...
அதிகரித்துள்ள வாக்காளர் எண்ணிக்கையைப் போலவே தேர்தல் நடைபெறும் காலத்தில் கடுமையான வெயில் மற்றும் சூரியன் உதயம், அஸ்தமன நேரத்தை கணக்கில் கொண்டு ஓட்டுப்பதிவுக்கு கூடுதல் நேரம் ஒதுக்க வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்தும் தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கைகள் முன்வைக்கப் பட்டன.

ஆலோசனை....
எனவே இது குறித்து தலைமை தேர்தல் கமிஷனர் வி.எஸ்.சம்பத், மற்ற இரு கமிஷனர்களான பிரம்மா, நசீம் சைதி ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.

2 மணி நேரம் அதிகரிப்பு...
அதைத்தொடர்ந்து பொதுவாக அனைத்து தொகுதிகளிலும் ஓட்டுப்பதிவை 2 மணி நேரம் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஓட்டுப்பதிவு நேரம்...
இந்த புதிய அறிவிப்பின் படி, ஓட்டுப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி, மாலை 6 மணி வரை தொடர்ந்து நடைபெறும் என அறிவிக்கப் பட்டுள்ளது. அதேபோல், வடகிழக்கு மாநிலங்களில், காலை 7 மணியில் இருந்து மாலை 5 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெறும்.

பாதுகாப்புக் காரணங்களுக்காக...
பாதுகாப்பு காரணங்களுக்காக சில குறிப்பிட்ட தொகுதிகளுக்கு காலை 7 முதல் மாலை 4 மணி வரை ஓட்டுப்பதிவு நேரம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அந்தவகையில், மணிப்பூர் மற்றும் நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் மட்டும் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டுமே ஓட்டுப்பதிவு நடைபெறும்.

அதிகாரபூர்வ அறிவிப்பு...
இந்நிலையில் ஓட்டுப்பதிவு 2 மணி நேரம் அதிகரிக்கப்பட்டிருப்பது குறித்தான அதிகாரபூர்வ அறிவிப்பை தலைமை தேர்தல் கமிஷன் நேற்று தன் இணைய தளத்தில் வெளியிட்டது.

சட்ட சபைத் தேர்தலுக்கும் பொருந்தும்....
அதில், லோக்சபா தேர்தலோடு இணைந்து நடத்தப்படும் ஆந்திரா, அருணாசல பிரதேசம், ஒடிசா, சிக்கிம் ஆகிய மாநிலங்களின் சட்டசபைத் தேர்தலுக்கும், தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் நடைபெறும் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்கும் இந்த புதிய ஓட்டுப்பதிவு நேரம் பொருந்தும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

முன்னோட்டம்...
கடந்த ஆண்டு இறுதியில் நடந்த 5 மாநில சட்டசபை தேர்தலின் போது யாரும் எதிர்பாராத வகையில் ஓட்டுப்பதிவு சதவீதம் அதிகரித்தது. வாக்காளர்கள் இரவு 8 மணி வரை நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து சென்றது குறிப்பிடத்தக்கது.
-
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம்












Click it and Unblock the Notifications