பாஜகவுக்கு தோல்வி உறுதி.. சத்தீஸ்கரில் மெஜாரிட்டியுடன் ஆட்சியை தக்கவைக்கும் காங்கிரஸ் - புது சர்வே
ராய்ப்பூர்: சத்தீஸ்கர் சட்டசபை தேர்தலில் மீண்டும் காங்கிரஸ் கட்சி தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியை தக்க வைக்கும் என்றும், பாஜகவுக்கு தோல்வி உறுதி என்றும் பரபரப்பான கருத்து கணிப்பு முடிவு வெளியாகி உள்ளது.
நடப்பு மாதமான நவம்பரில் மட்டும் 5 மாநில சட்டசபை தேர்தல்கள் அறிவிக்கப்பட்டன. இதில் மிசோராம் சட்டசபை தேர்தல் முடிவடைந்துள்ளது. மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மாநில சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நாளை நடைபெற உள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்துக்கு வரும் 25ம் தேதியும், தெலங்கானாவுக்கு வரும் 30ம் தேதியும் ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. இந்த மாநில சட்டசபை தேர்தல்களில் பதிவான ஓட்டுக்கள் டிசம்பர் 3ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
இதில் சத்தீஸ்கர் மாநிலத்தை பொறுத்தமட்டில் மொத்தம் 90 தொகுதிகள் உள்ளன. தற்போது இங்கு காங்கிரஸ் ஆட்சி நடக்கும் நிலையில் முதல்வராக பூபேஷ் பாகேல் உள்ளார். இங்கு நக்சலைட்டுகளின் அச்சுறுத்தல் இருப்பதால் 2 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. முதற்கட்டமாக கடந்த 7 ம் தேதி 20 சட்டசபை தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து முடிந்தது. இதையடுத்து மீதமுள்ள 70 தொகுதிகளுக்கு 2வது கட்டமாக நாளை சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தை பொறுத்தமட்டில் காங்கிரஸ்-பாஜக இடையே தான் கடும் போட்டி நிலவுகிறது. வரும் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்கவைக்க காங்கிரஸ் முயற்சித்து வருகிறது. அதேநேரத்தில் மறுபுறம் மாநிலத்தில் இழந்த செல்வாக்கை மீட்டு மீண்டும் அரியணை ஏறும் வகையில் வியூகம் வகுத்து பாஜக தேர்தலை எதிர்கொண்டு வருகிறது.
இந்நிலையில் தான் சத்தீஸ்கர் மாநில சட்டசபை தேர்தல் தொடர்பாக பல்வேறு கருத்து கணிப்புகள் மேற்கொள்ளப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. லோக்போல் (LokPoll)எனும் அமைப்பு சார்பில் சத்தீஸ்கர் சட்டசபை தேர்தல் தொடர்பாக தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 9,000 பேரிடம் இந்த கருத்து கணிப்பு நடத்தப்பட்ட நிலையில் தற்போது அதன் முடிவுகள் வெளியாகி உள்ளது.
இந்த கருத்து கணிப்பின் முடிவு என்பது காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக உள்ளது. அதாவது காங்கிரஸ் கட்சி சத்தீஸ்கரில் மீண்டும் ஆட்சியை தனி மெஜாரிட்டியுடன் தக்கவைக்கும் என தெரிவித்துள்ளது. மாறாக இந்த முறை நடக்கும் சட்டசபை தேர்தலிலும் பாஜக பின்னடைவை சந்திக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கருத்து கணிப்பின்படி சத்தீஸ்கர் மாநிலத்தில் மொத்தம் உள்ள 90 சட்டசபை தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 59 முதல் 61 தொகுதிகளில் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாறாக பாஜக 28 முதல் 30 தொகுதிகளிலம், மற்றவர்கள் பூஜ்ஜியம் முதல் ஒரு தொகுதி வரையும் பெலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கருத்து கணிப்பின் முடிவால் காங்கிரஸ் கட்சியினர் உற்சாகமடைந்துள்ள நிலையில் பாஜகவினர் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications