அந்தமான் அருகே காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகிறது... தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு!
அந்தமான் அருகே அடுத்த 24 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் என இந்திய வானியை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து
டெல்லி: அந்தமான் அருகே அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் இந்த ஆண்டு தாமதமாக தொடங்கிய பருவமழை பனிப்பொழிவு காரணமாக இயல்புக்கும் குறைவான அளவிலேயே பெய்தது. இதனால் சென்னை உட்பட தமிழகத்தின் பெரும்பாலான நீர் நிலைகள் வறண்டு போயுள்ளன.

இதனால் சென்னை உட்பட பெரும்பாலான நகரங்களில் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இதனால் மழை வருமா என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்துள்ளது.
இந்நிலையில் அந்தமான் அருகே தென்கிழக்கு வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுநிலை வலுவடைந்தால் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications