வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு பகுதி.. தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு
Recommended Video
டெல்லி: தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு பகுதியால், தமிழகத்தின் சில இடங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் நிறைவுற்று 3 வாரங்களுக்கு மேலாகியும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக, கோடை காலத்தை காட்டிலும் வெயில் வெளுத்து வாங்கி வருகிறது.
கூடவே சேர்ந்து அனல் காற்றும் அவ்வப்போது வீசி வருவதால் பகல் நேரங்களில் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. தலைநகர் சென்னை உட்பட பல வட தமிழக மாவட்டங்களில், இயல்பை விட 3 முதல் 5 டிகிரி வெப்பம் கூடுதலாக கொளுத்தியது.
சுமார் 190 நாட்களுக்கு மேல் மழை பெய்யாததால் சென்னையில் வரலாறு காணாத தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு ஒருபக்கம் மக்களை வேதனையில் ஆழ்த்தியது. மறுபுறம் கொடும் வெப்பம் மக்களை வாட்டி வதைத்தது. வெப்பச் சலனம் காரணமாகவும், தென்மேற்கு பருவமழை தாக்கத்தினாலும் தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்தது.
அப்போது கூட வருண பகவான் சென்னை நகருக்கு கருணை காட்டவில்லை. எப்போது மழை பெய்யும் என சென்னை மக்கள் எதிர்நோக்கி காத்திருந்தனர். இந்நிலையில் நேற்று முன் தினம் மாலை முதல் சென்னை தட்பவெப்ப நிலை சிறிது மாறியது. நேற்று பிற்பகல் சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஆங்காங்கே 15 நிமிடங்கள் முதல் அரை மணி நேரம் வரை மழை பரவலாக பெய்து மக்கள் மனதை குளிர வைத்தது.
இந்நிலையில் தமிழகத்திற்கு அடுத்த 3 நாட்களுக்கு மிதமானது முதல் கனமழை பெய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வடகிழக்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு பகுதியால், தமிழகத்தின் சில இடங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காற்றழுத்தத் தாழ்வு பகுதியால் கர்நாடகா, மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களிலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் கூறியுள்ளது.
மேலும் வடக்கு, தெற்கு வங்க கடல், லட்சத்தீவு கடல்பகுதிக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications