நாட்டிலேயே குஜராத்தில்தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் குணமடைவது மிக மிக குறைவு
Subscribe to Oneindia Tamil
அகமதாபாத்: நாட்டிலேயே குஜராத்தில்தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மிக மிக குறைவான எண்ணிக்கையில் குணமடைந்து வருகின்றனர்.
கேரளாவில் தொடக்கத்தில் கொரோனா தொற்று அதிகமாக இருந்தபோதும் அது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது மகாராஷ்டிரா மற்றும் வட இந்திய மாநிலங்களில்தான் அதிக பாதிப்பு உள்ளது.

அதேநேரத்தில் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் கணிசமான அளவு, கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் குணமடைந்தும் வருகின்றனர். ஆனால் குஜராத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மீள்வது மிக மிக குறைவாக உள்ளது.
மாநிலங்களும் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் விகிதமும்:
- கேரளா- 70.48%;
- ஹரியானா 59.85% ;
- தமிழ்நாடு- 40.64% ;
- ஒடிஷா - 38.55%;
- டெல்லி- 32.21%
- கர்நாடகா- 30.68% ;
- பீகார் 29.79% ;
- ஜம்மு காஷ்மீர்- 22. 60%
- தெலுங்கானா- 20.57%
- பஞ்சாப்- 19.06%;
- ராஜஸ்தான் 17.78 %;
- மேற்கு வங்கம்- 17.32%;
- ஆந்திரா- 14.76%;
- மகாராஷ்டிரா 13.97%;
- உ.பி. 11.94%
- மத்திய பிரதேசம்- 9.58%
- குஜராத் - 6.30%


Click it and Unblock the Notifications
