உறுதியாகிறது திமுக- காங். கூட்டணி: சோனியாவுடன் கனிமொழி திடீர் சந்திப்பு!!
டெல்லி: லோக்சபா தேர்தலில் திமுக, காங்கிரஸ் இடையே கூட்டணி உருவாவதை உறுதிப்படுத்தும் விதமாக சோனியா காந்தியை கனிமொழி திடீரென சந்தித்து பேசியுள்ளார்.
லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி கிடையாது என்று திமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனால் திமுக- காங்கிரஸ் கூட்டணி இல்லை என்று கருணாநிதி மற்றும் மு.க. ஸ்டாலின் அறிவித்தனர்.

ஆனால் திமுகவில் மு.க. அழகிரி, தயாநிதி மற்றும் கனிமொழி ஆகியோர் திமுக- காங்கிரஸ் கூட்டணிக்காக முயற்சிகளை மும்முரமாக்கினர். இதனால் திமுக பொதுக்குழு தீர்மானம் நிறைவேற்றிய பின்னர் மத்திய அமைச்சர் குலாம்நபி ஆசாத் சென்னை வந்து கருணாநிதியை சந்தித்து பேசினார்.
காங்கிரஸுடன் கூட்டணி இல்லை: ஸ்டாலின்
அப்போதும்கூட காங்கிரஸுடன் கூட்டணி கிடையாது என்று திமுக பொருளாளர் ஸ்டாலின் உறுதிபட தெரிவித்திருந்தார். இந்த நிலையில் ஸ்பெக்ட்ரம் வழக்கில் கலைஞர் டிவி தொடர்பான தொலைபேசி உரையாடல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
ராகுல் -திருமா சந்திப்பு
இந்த பரபரப்பு அடங்குவதற்குள்ளாகவே காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை திமுகவின் கூட்டணி தூதராக செயல்பட்டு வரும் திருமாவளவன் சந்தித்து பேசினார். ஒரு மணிநேரம் இச்சந்திப்பு நடைபெற்றது.
திமுக- காங். கூட்டணியை ஏற்பார்கள்..
இந்த சந்திப்புக்குப் பின்னர் திமுக- காங்கிரஸ் கூட்டணி ஏற்பட்டால் மக்கள் ஏற்பார்கள் என்று திருமாவளவன் நம்பிக்கை தெரிவித்து பேசிவருகிறார். இதனால் திமுக- காங்கிரஸ் கூட்டணி உருவாகும் என்று கூறப்பட்டு வருகிறது.
வீரப்ப மொய்லி அல்லது அந்தோணி சென்னை வருகை?
இதனிடையே வீரப்ப மொய்லி அல்லது ஏ.கே. அந்தோணி சென்னை வந்து கருணாநிதியை சந்தித்து கூட்டணியை உறுதி செய்கின்றனர் என்றும் தகவல்கள் வெளியாகின.
சோனியாவுடன் கனிமொழி சந்திப்பு
இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியாவை கனிமொழி திடீரென சந்தித்து பேசியிருப்பது திமுக- காங்கிரஸ் கூட்டணியை உறுதிப்படுத்தியிருப்பதாக தெரிகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவாக இருந்த கனிமொழியை, காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார். பின்னர் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக கனிமொழி டெல்லி சென்றார். நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்ற கனிமொழி, டெல்லியில் சோனியாகாந்தியின் வீட்டுக்கு சென்றார். அங்கு அவர் சோனியாகாந்தியை சந்தித்து பேசினார்.
திமுக- காங். கூட்டணி உறுதியாகிறது
இந்த சந்திப்பின் போது ஸ்பெக்ட்ரம் வழக்கில் புதிதாக வெளியாக தொலைபேசி உரையாடல்கள் குறித்தும் திமுக- காங்கிரஸ் கூட்டணி குறித்தும் இருவரும் விவாதித்ததாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பைத் தொடர்ந்து திமுக- காங்கிரஸ் கூட்டணி உறுதியாகிவிட்டதாகவும் அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications