மனநலம் பாதித்தவர்கள் வார்டில் ராகுலை சேர்க்க அனுமதி கார்டு... மருத்துவமனை ஊழியர் டிஸ்மிஸ்!
லக்னோ: காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தியை மனநல மருத்துவமனையில் சேர்க்க கார்டு அளித்த லக்னோ மருத்துவமனை ஊழியர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவ, மாணவியருக்கு காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி ஆதரவு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்த ராகுலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பாஜகவின் இளைஞர் அணியான பாரதிய ஜனதா யுவ மோர்ச்சாவினர் உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள கிங் ஜார்ஜ் மருத்துவ பல்கலைக்கழகத்தில் மனநலம் பாதிக்கப்பட்டோர் இருக்கும் வார்டில் அவரை சேர்க்க கார்டு வாங்கியுள்ளனர்.
ராகுலை அனுமதிக்க கார்டு வழங்கிய விவாகரம் தொடர்பாக கிளார்க் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார், மற்றொரு ஊழியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
ராகுலை மருத்துவமனையில் அனுமதிப்பதற்கான கார்டை பெறுவதற்கான விண்ணப்பத்தை பாஜக இளைஞர் அணியின் உத்தர பிரதேச மாநில பொதுச் செயலாளர் அபிஜாத் மிஷ்ரா பூர்த்தி செய்துள்ளார். அவர் ராகுல் காந்தி மீது ஹஸ்ரத்கஞ்ச் காவல் நிலையத்தில் புகாரும் அளித்துள்ளார்.
ராகுல் காந்தி, த.பெ. ராஜீவ் காந்தி, துக்லகாபாத், ரேபரேலி, உத்தர பிரதேசம் என்ற முகவரியில் அனுமதி கார்டை பெற்றுள்ளனர். இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த மருத்துவமனை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
-
விஜய் மீது வெறுப்பில் ராகுல்! டெல்லி ப்ரோக்ராம் கேன்சல்! எம்எல்ஏ வேட்டையால் வேதனையில் டெல்லி தலைகள்! -
ஒட்டுமொத்த தென்னிந்திய அரசியலும் மாறிடுச்சு.. ஒரே மாதத்தில் ராகுல் எடுத்த 3 முடிவுகள்.. முக்கியம் -
ராகுல் காந்தியை முதலமைச்சர் விஜய் சந்திக்காதது ஏன்? பிரவீன் சக்கரவர்த்தி கொடுத்த விளக்கம்! -
டெல்லியில் முதல்வர் விஜய் - சோனியா, ராகுல் சந்திப்பு திடீர் ரத்து.. என்ன நடந்தது? -
முதல்வர் பதவிக்கு ‘குட்பை'.. ராஜினாமாவிற்கு பின் சோனியா - ராகுலுக்கு நன்றி கூறி கலங்கிய சித்தராமையா -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில்












Click it and Unblock the Notifications